அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார் வளர்மதி

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (110)
Share
Advertisement
ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார் வளர்மதி

அ.தி.மு.க., வின் இரு அணிகளிடையே சமரச பேச்சு துவக்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சசிகலா அணியிலிருந்து விலகி, பன்னீர்செல்வம் அணிக்கு மாற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் பாட நுால் வாரிய தலைவராக உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதற்கு பரிசாக, அவருக்கு தமிழக அரசின் பாடநுால் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரன் ஆதரவாளராக வலம் வந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்தார். மாநில பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்களின் தேர்தல் பிரசார பயண விவகாரத்தில், வளர்மதி மீது புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து, அவரிடம், தினகரன் விசாரணை நடத்தினார். இதனால், அதிருப்தி அடைந்த வளர்மதி, தேர்தல் ரத்துக்கு மறுநாள், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தார். ஏற்கனவே, வளர்மதி மீது ஏற்பட்ட மோதலால், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது சசிகலா அணியை விட்டு ஒதுங்கி உள்ள வளர்மதியும், பன்னீர்செல்வம் அணியில், ஐக்கியமாக உள்ளார். அதுகுறித்து, முக்கிய நிர்வாகிகளிடம் பேசி வருவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
20-ஏப்-201719:17:22 IST Report Abuse
Sathish மறுபடியும் இவர்களுக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்தால் இளைஞர்கள் அனைவரும் தீவி... வாதி ஆகிவிடுவார்கள். தயவுசெய்து இவர்களை ஓரங்கட்டுங்கள்.
Rate this:
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
17-ஏப்-201721:48:26 IST Report Abuse
எல்.கே.மதி ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார் வளர்மதி வாழைப்பழத்துக்கு தாவும் குரங்கு போன்ற குணம் கொண்ட இந்த கொள்கைக் குன்று, லஞ்சம் கொடுக்கும் இடமெல்லாம் தாவும்.... காசேதான் கடவுளடா
Rate this:
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
17-ஏப்-201721:39:32 IST Report Abuse
எல்.கே.மதி தற்போது சசிகலா அணியை விட்டு ஒதுங்கி உள்ள வளர்மதியும், பன்னீர்செல்வம் அணியில், ஐக்கியமாக உள்ளார். குழாயடி சண்டைக்காரி தோற்றம் கொண்ட, கட்சியின் கொள்கை வீராங்கனை அல்லவா இவர்? இவரின்றி, எப்படி இனி சசி அதிமுக தமிழகத்தில் ஜொலிக்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X