பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் இழப்பீடு எப்போது? விவசாயிகள் காத்திருப்பு

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (6)
Advertisement
பயிர் இழப்பீடு, எப்போது, விவசாயிகள், காத்திருப்பு

'பயிர் பாதிப்புக்கான இழப்பீடு எப்போது கிடைக்கும்' என, நான்கு மாதங்களாக, 15 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 50 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், 30 லட்சம் விவசாயிகளுக்கு, தமிழக அரசு, 2,247 கோடி ரூபாய், வறட்சி நிவாரணம் வழங்கியது. இதன் மூலம், ஏக்கருக்கு, 5,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை நிவாரணம் கிடைத்தது.


காப்பீடு தாமதம்:

தமிழகத்தில், 15 லட்சம் விவசாயிகள், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மூன்று காப்பீட்டு நிறுவனங்களில், 30 லட்சம் ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் பாதிப்புக்கு, இந்த நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக, மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் இடங்களில், ஆய்வுகள் நடந்தன. இதுகுறித்த அறிக்கை, காப்பீடு நிறுவனங்களிடம் சம்ர்பிக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் நிவாரணம் கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயிர் அறுவடை ஆய்வு, முறையாக நடக்கவில்லை எனக்கூறி, இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்கள் மறுக்கின்றன. இதுகுறித்து, மத்திய அரசிடம் விளக்கி உள்ளோம். விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
goldbell - siliguri,இந்தியா
17-ஏப்-201718:48:30 IST Report Abuse
goldbell தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்கள் கிராம வாரியாக கூட்டுறவு முறையில் ஒரு அரசு அதிகாரி நடுநிலையுடன் ஒன்றிணைத்து ஒன்றாக கூடி ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற முறையில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை அவரவர் நிலத்திற்கேற்ப பிரித்து கொள்ளலாம் , இந்த முறையினால் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு அதிகரிக்கும் ,அனைவரும் சேர்ந்து உழைப்பதால் ஒற்றுமை கூடும் ,மகசூல் அதிகரிக்கும் ,நீர் சேமிப்பு ஆகும் , கூட்டுறவு முறையில் கடன் பெற்று விவசாயம் செய்வதால் நஷ்டம் ஏற்படும்போது அரசாங்கத்தின் பார்வைக்கு எளிதில் தெரிய வந்து உரிய இழப்பீடு உடனே கிடைக்கும் ,ஒரு கிராமம் ஒரு பயிர் முறையினால் விலை நிலைத்து இருக்கும் ..மேலும் பல மறைமுக நன்மைகள் கிடைக்கும் முயற்சி செய்வோம் விவசாயத்தை காப்போம் ....
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
17-ஏப்-201715:12:45 IST Report Abuse
Selvaraj Thiroomal இன்சூரன்ஸ் துறையை நம்பிக்கொண்டிருக்கும் பலருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம்.. காப்பீடு விஷயங்களில் மக்களும் அரசும் நேர்மையாக நடக்காததால் பலகாலமாக முன்னேறவில்லை..வாகனங்களுக்கு கண்மூடித்தனமாக ஏற்றிக்கொண்டு வந்தபோது அதை கவனிக்காத மக்கள்,, நமக்கும் நாளை பரவும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை...பயிர்காப்பீடு குறித்து இதுவரை காப்பீடு நிறுவனங்கள் முறையாக பயிற்றுவிக்க படவில்லை என்பதை முக்கியமாக பார்த்தால்,, தாமதத்தின் பின்னணி விளங்கும்..அரசுகளின் நேர்மையும் புரியும்
Rate this:
Share this comment
Cancel
Palani - chennai,இந்தியா
17-ஏப்-201712:13:08 IST Report Abuse
Palani நான் கடந்த 5 இந்தேதி R I Office சென்றேன் சிறு விவசாயி மனுவில் கையெழுத்து வாங்குவதற்காக I reached RI office at 12:00PM, some body said that RI will come here at 3:ooPM there after I was waiting such a logn period adjacent of office. I showed my application to RI for get sign on it. He was conducted interview session and threw my application form . Eventhough I was very silent and VAO also their , after half-hour, I got into RI officer room, again he was started enquiry and he was laughing with their department ladies (co-worker). The second time, my application handed over to me without sign . I asked what was the problem in my application ? why did not sign on it ? . He told me that I need to wait some more time. I already spent 4 hours. finally I turned to home without sign. This kind Revenue department officer does not know value of the farmers, I was totally upset about scenario. I was trying to run into agricultural. such situation how to improve our agricultural growth? Note : I don't want mention the RI office name and location. Thanks Palani
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X