அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரட்டை இலை யாருக்கு..? தேர்தல் கமிஷன் இன்று விசாரணை

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (16)
Advertisement
இரட்டை இலை, யாருக்கு, தேர்தல் கமிஷன், இன்று, விசாரணை

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணையை இன்று நடத்தும் தேர்தல் ஆணையம், இரு தரப்புக்கும் கூடுதல் அவகாசம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை, தேர்தல் கமிஷனில், இன்று(ஏப்.,17) நடக்கிறது. பன்னீர் தரப்பில், ஏற்கனவே, 42 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சசிகலா தரப்பில், 20 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய, எட்டு வார கால அவகாசம் கோரப் பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு எந்த பதிலும் தரப்படவில்லை.

இந்நிலையில், இன்று நடக்கும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், ஆவணங்களை தாக்கல் செய்ய, சசிகலா மற்றும் பன்னீர் அணிகளுக்கு தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் வழங்கும் என தெரிகிறது. அதன் பின், இரட்டை இலை சின்னம் மற்றும் பெயர் தொடர்பான விசாரணை எப்போது என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் என்று தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-201715:43:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நீங்க அவகாசம் கொடுப்பீங்க ஆனா ஆவணங்கள் தாக்கல் பண்றதுக்கு ஒருவர் கூட வெளியில் இருக்கமாட்டார்களே, என்ன செய்வது , அதனால் உடனடியாக தீர்ப்பு சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201712:51:11 IST Report Abuse
Maverick ரெடடை இலை...சூரியன் சின்னங்கள் தமிழ் நாட்டின் அவமான சின்னங்கள்......ரெண்டையும் முடக்கி போட்டால் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
17-ஏப்-201711:03:45 IST Report Abuse
balasubramanian இவர்களுக்கு நியாயம் சொல்ல ஒரு தனி நீதிமன்றம் அமைக்கத்தான் வேண்டும் .சண்டை முடிந்ததும் தயவு செய்து மக்களின் தண்ணீர் பிரச்சினை ,விவசாயிகளின் பிரச்சினை பற்றி யோசிக்க ஆரம்பியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X