மலப்புரம் தொகுதியை தக்க வைத்தது முஸ்லிம் லீக்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (5)
Advertisement
மலப்புரம் தொகுதியை தக்க வைத்தது முஸ்லிம் லீக்

மலப்புரம்: கேரள மாநிலம், மலப்புரம் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியான, காங்., கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக், மீண்டும் வெற்றி பெற்றது.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். காங்., தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியாக உள்ளது. இங்கு, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், மலப்புரம் லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக இருந்த, முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, இ.அகமது, 78, சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதியில், இடைத்தேர்தல் நடந்தது. இதில், முஸ்லிம் லீக் சார்பில், குஞ்சாலி குட்டி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மார்க்சிஸ்ட் வேட்பாளர், பைசல் களம் இறங்கினார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.முஸ்லிம் லீக் வேட்பாளர் குஞ்சாலி குட்டி, 1.70லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், பைசலை தோற்கடித்தார். பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ், மூன்றாம் இடத்திற்கு
தள்ளப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivaram - singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201711:21:13 IST Report Abuse
sivaram அப்பட்டமான மதவாதம் . இங்கு மதவாத கட்சி வெற்றி பெற்று உள்ளது இதனை ஏற்க முடியாது. இங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் மற்றும் வாக்கு எந்திரத்தில் கோளாறு உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Abdul Basith - deira dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201710:11:40 IST Report Abuse
Abdul Basith உணரவும் உரிமையும் விட்டு கொடுக்க முடியாது என்று நிரூபித்துவிட்டார்கள் கேரள முஸ்லீம் மக்கள் .
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
18-ஏப்-201711:30:14 IST Report Abuse
Indianகேரளா முஸ்லீம் மக்களா ? உங்கள் கூறுப்படி முஸ்லீம் என்பதால் மட்டுமே ஊழலில் சிக்கி பதவி ராஜினாமா செய்தவரை மீண்டும் வெற்றிப்பெற செய்துஇருக்கிறார்கள் போல்....
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201713:43:51 IST Report Abuse
Yaro Oruvanஹா ஹா.. இப்படி முஸ்லீம் லீக்குன்னு பேர வச்சிக்கினு சொல்லி வச்சி மொத்தமா குத்துனா அது உணர்வு / உரிமை... முஸ்லீம் லீக்குன்னு மதத்தை பேர்ல வச்சிக்குனு ஓட்டுப்பிச்சை எடுக்குற கும்பல் மதச்சார்பற்ற கூட்டணியாம்.. ஆனா பாஜக மதச்சார்பான கட்சி.. உபியில யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆனதுல தப்பே இல்ல.. ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு யோகி ஆதித்யநாத் தேவை.....
Rate this:
Share this comment
Chandra Bose - Chennai,இந்தியா
18-ஏப்-201723:49:46 IST Report Abuse
Chandra Boseதலை அதை நீங்க முஸ்லீம் நாட்டுல இருந்திட்டு சொல்லக்கூடாது, சம்பாதிக்க முஸ்லீம் நாடு, மத்ததுக்கெல்லாம் இந்தியாவோ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X