அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன்... கூட்டணியில்லை : மெஜாரிட்டி கிடைக்குமா என குமாரசாமி சந்தேகம்

Added : ஏப் 17, 2017
Advertisement

மங்களூரு: “சட்டசபை தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ காங்கிரஸ் உட்பட, எந்த அரசியல் கட்சிகளுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு வேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மீண்டும் தேர்தலை சந்திக்க தயார்,” என, மாநில ம.ஜ.த., தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

மங்களூரில் செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது: காங்கிரஸ் உட்பட, எந்த கட்சியுடனும் ம.ஜ.த., கூட்டணி வைத்து கொள்ளாது; ரகசிய ஒப்பந்தமும் செய்து கொள்ளாது. இது பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி கற்பனையானவை.தேர்தலுக்கு பின், ம.ஜ.த., காங்கிரசுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைக்க உள் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை.அனுபவம் பேசுகிறது ஒரு வேளை அடுத்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரசுடனோ, பா.ஜ.,வுடனோ கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மீண்டும் தேர்தலை சந்திப்போம். இது தான் எங்கள் கட்சியின் முடிவு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைத்த அனுபவம் ம.ஜ.த.,வுக்கு உள்ளது.
சட்டசபை தேர்தலில், தொங்கு நிலை ஏற்படாது. மஜ.த., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, மாநில மக்கள் வாய்ப்பளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளின் தோல்வியால், ம.ஜ.த., ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

போட்டியிடாதது ஏன்? : மாநிலத்தில் வறட்சி நிலவியும், அதை கவனிக்காமல் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் தந்தனர். அரசு கார்களில், பணம் கொண்டு வந்து, இடைத்தேர்தலில் வாரி இறைத்தனர். இப்படிப்பட்ட தேர்தலில், போட்டியிட விரும்பாமல்தான், ம.ஜ.த., களமிறங்கவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது பிரமை. இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகள், அடுத்த சட்டசபை தேர்தல்களில், மண்ணை கவ்விய உதாரணம் நிறைய உள்ளது. வெற்றி பெற்றதால், காங்கிரஸ் பெருமைப்பட வேண்டியதில்லை. மாநிலத்தில் கடும் வறட்சியால், மக்கள் தத்தளித்தும், முதல்வர் சித்தராமையா, டில்லி தலைவர்களை சந்திப்பதில் காலத்தை கடத்தியுள்ளார். பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கால்நடை தீவனம் வழங்குவதில், முறைகேடு நடக்கிறது.

மைசூரு தீ விபத்து : மைசூரில் நேற்று (நேற்று முன் தினம்) நடந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். ரூபாய் நோட்டு அச்சடிக்கும் கெமிக்கலை, சரியான முறையில் அப்புறப்படுத்தாததால், தீ விபத்து ஏற்பட்டு சிறுவன் இறந்துள்ளான்.மங்களூரு காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ., உட்பட, மூன்று பேர், தேர்தல் வேளையில் ம.ஜ.த.,வில் இணையவுள்ளனர். எச்.டி.தேவகவுடா பிரதமராக இருந்த போது, காஷ்மீர் அபிவிருத்திக்கு அளித்துள்ள பங்களிப்பு பற்றி ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, எதுவும் தெரியாது. இதனால் தான் தேவகவுடாவின் திறமை பற்றி அவமதிப்பாக பேசியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X