பணத்தை இறைத்து காங்., வெற்றி : எடியூரப்பா குற்றச்சாட்டு| Dinamalar

பணத்தை இறைத்து காங்., வெற்றி : எடியூரப்பா குற்றச்சாட்டு

Added : ஏப் 17, 2017

குண்டுலுபேட்: “பணத்தை வாரியிறைத்து, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையான வெற்றியாக கருத முடியாது,” என, மாநில பா.ஜ., தலைவர் எடியூரப்பா கூறினார்.
குண்டுலுபேட் இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நிரஞ்சன் குமார் தோல்வியடைந்தார். பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், குண்டுலுபேட்டில் நேற்று நடைபெற்றது.

மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கவில்லை; பணத்தை வாரியிறைத்து ஓட்டு வாங்கியுள்ளனர். ஏறக்குறைய, 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், பத்து நாட்களாக முகாமிட்டு, அரசு பணிகளை புறக்கணித்து, தேர்தலில் வெற்றி பெற பாடுபட்டுள்ளனர்.ஆட்சி அதிகாரத்துக்கு அஞ்சாமல் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவே, இங்கு வந்துள்ளோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால், 2018ல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற போவது நுாற்றுக்கு நுாறு உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X