தேவகவுடாவை விமர்சித்த உமர் அப்துல்லாவுக்கு எதிர்ப்பு

Added : ஏப் 17, 2017
Advertisement

பெங்களூரு: மாஜி பிரதமர் எச்.டி.தேவகவுடாவை, அவமதிக்கும் வகையில் 'டுவிட்' செய்துள்ள ஜம்மு - காஷ்மீர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக, அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த, முன்னாள் கடற்படை அதிகாரிகுல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பாக, அந்நாட்டின் மாஜி அதிபர் முஷ்ரப்பிடம், தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி எடுத்திருந்தது.
இதனை விமர்சித்து, ஏப்ரல் 13ம் தேதி டுவிட் செய்துள்ள, ஜம்மு - காஷ்மிர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லா, 'முஷ்ரப்பை பேட்டி எடுப்பதும், இந்தியாவின் அபிவிருத்தி குறித்து, பாகிஸ்தான் ஊடகங்கள் தேவகவுடாவுடன் விவாதிப்பதும் ஒன்று தான்,' என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலை தளங்கள் மூலமாக, தேவகவுடாவுக்கு ஆதரவாகவும், உமர் அப்துல்லாவை திட்டியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
l 'காஷ்மிரில் உயிர் பயத்திலிருந்த நீங்களும் (உமர் அப்துல்லா), உங்கள் தந்தையும் (பருக் அப்துல்லா) லண்டனில் அடைக்கலமானீர்கள். தேவகவுடா பிரதமராக இருந்த போது, உங்கள் குடும்பத்தினரை மீண்டும் இந்தியா அழைத்து வந்து, மாநிலத்தில் தேர்தல் நடத்தி, நீங்கள் ஆட்சிக்கு வரவும் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட நபரின் திறமை, கவுரவத்தை பற்றி தாழ்த்தி பேச, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
l தேவகவுடாவின் நாட்டுப்பற்று, மக்கள் மீதான அக்கறை, அபிவிருத்தி விஷயத்தில் தொலைநோக்கு பார்வை குறித்து ஊடகங்கள் பாராட்டியுள்ளன. தேவகவுடாவின் சக்தி என்ன என்பதை, நீங்களும், உங்கள் தந்தையும் கர்நாடகாவுக்கு வந்து பாருங்கள் தெரியும். 50 ஆண்டுகளாக மக்களுக்காக உழைக்கும் அவரை அவமதித்துள்ள உங்களின் குணம் எப்படிப்பட்டது? என பலரும் காட்டமாக பதிலடி கொடுத்து உள்ளனர். இது போன்று, பா.ஜ., எம்.எல்.ஏ., சி.டி.ரவி, தொழிலதிபர் மோகன்தாஸ் பை உட்பட, கர்நாடகாவில் பல தலைவர்களும், கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேவகவுடா, கர்நாடகாவின் மண்ணின் மைந்தன். நாட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை கனவிலும் மறக்க முடியாது. குறிப்பாக, உமர் அப்துல்லாவின் குடும்பத்துக்கு, தேவகவுடா செய்துள்ள பேருதவியை மறந்து, அவரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது.

சி.டி.ரவி, எம்.எல்.ஏ., - பா.ஜ.,

ஜம்மு - காஷ்மிரில் பல ஆண்டுகளாக தேர்தலே நடக்கவில்லை. அப்துல்லா குடும்பத்தினர், உயிர் பயத்தால், லண்டனில் வசித்து வந்தனர். தேவகவுடா பிரதமராக இருந்த போது, பாதுகாப்பு ஊழியர்களின் ஆலோசனையை பெரிது படுத்தாமல், காஷ்மிரின் ரசவுரி சென்றார். அதுவரை எந்த பிரதமரும், அங்கு சென்றதே இல்லை. பரூக் அப்துல்லாவை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு அழைத்து வந்து, தேர்தலில் நிறுத்தினார். தன்னுடன் திறந்த ஜீப்பில், பிரசாரத்துக்கு அழைத்து சென்றார். தேவகவுடா இல்லையென்றால், பருக், உமர் இருவருமே முதல்வராகி இருக்க முடியாது. இந்த நன்றியை மறந்து, தேவகவுடாவின் திறமையை விமர்சித்தது சரியல்ல.

டேனிஷ் அலி, முதன்மை செயலர், ம.ஜ.த.,

ஜம்மு - காஷ்மிரில் பயங்கரவாதத்தை பகடைக்காயாக பயன்படுத்தி, அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல் இடைத்தரகர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா இருவரும் பேசியதற்காக, தேவகவுடா மதிப்பு, கவுரவம் பாதிக்கப்படாது. 50 ஆண்டு பொது வாழ்வில் அவர் அளித்துள்ள பங்களிப்பு பற்றி, மக்களுக்கு தெரியும்.

ரமேஷ் பாபு, செய்தி தொடர்பாளர், ம.ஜ.த.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X