அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மோடி உறுதி!
குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள்
பார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம்

சூரத் : ''ஏழை மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், குறைந்த விலையிலான, உயிர் காக்கும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற வகையில், புதிய சட்டம் அமல்படுத்தவும் மத்திய அரசு தயார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

குறைந்த விலை, உயிர் காக்கும், மருந்துகள், மோடி, உறுதி, பார்லி, புதிய சட்டம், கொண்டுவர, திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநிலமான, குஜராத்துக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். சூரத்தில், தொண்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவ
மனையை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, அரசர்களாலோ, தலைவர்களாலோ உருவாக்கப்பட்டதல்ல. இது, ஒரு ஜனநாயக நாடு.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கோவில்கள், அன்னதான சத்திரங்கள் போன்றவை, அரசால் உருவாக்கப்பட்டவை அல்ல; மக்கள் நலன் கருதி, மக்களால், கொடையாளர்களால் உருவாக்கப்பட்டவை.
இது, ஏழைகள் நிறைந்த நாடு. நம் நாட்டில், டாக்டர்களின் எண்ணிக்கை குறைவு; மருத்துவமனைகள் குறைவு; ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் நலன் கருதி, குறைவான விலையில் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

குறைந்தவிலை மருந்துகள்


குறைந்த விலையில் மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் கிடைக்கும் வகையில்,

மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மருத்துவ திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை, அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை மாற, மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார்.
அந்த வகையில், நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், டாக்டர்கள், குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. இது குறித்து ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், பல உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.நாட்டில், ஏழைகளின் சுகாதார வசதிக்காக, தொண்டு நிறுவனங்கள் சார்பில், இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். வசதி படைத்தோர் இதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'நகை வடிவமைப்பில் ஜொலிக்க வேண்டும்'


குஜராத் மாநிலம், சூரத்தில், வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:வைரம் பட்டை தீட்டுவதில், உலகளவில், சூரத் வைரமாக திகழ்கிறது. வைரத்தை அறுத்தல், பட்டை தீட்டுதலோடு நிற்காமல், நகை வடிவமைப்பிலும், நாம் ஜொலிக்க வேண்டும்.
இந்திய பாரம்பரிய, 'டிசைன்' நகைகளுக்கு, உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. காலத்திற்கு ஏற்றார் போல், வகை வகையான டிசைன்களை, நம் முன்னோர்கள் வடிவமைத்து உள்ளனர்.அவர்களின் பெருமையை உலகறிய செய்யும் வகையில், இக்கால வடிவமைப்பாளர்கள் செயல்பட வேண்டும்.
அதே போல், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கென, உலகளவில் தனி இடத்தை உருவாக்கும் நோக்குடன் பணியாற்ற வேண்டும். இளம் வடிவமைப்பாளர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisementகாரை விட்டு இறங்கி சிறுமியிடம் பேச்சு


குஜராத்தில், பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று சூரத் சென்றார். மோடி காரில் செல்வதை காண, சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டனர். காருக்குள் அமர்ந்தபடி, அனைவருக்கும் கை காட்டியபடி, மோடி சென்றார். அப்போது, 4 வயது சிறுமி நான்சி, மக்கள் கூட்டத்திலிருந்து விலகி, மோடியை காண ஓடி வந்தாள்.
மோடியின் வாகனத்திற்கு முன் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், அந்த சிறுமியை, ஓரமாக அழைத்துச் சென்றனர். இதை பார்த்த மோடி, தன் காரை நிறுத்தி, அந்த சிறுமியை தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார்; காரை விட்டு இறங்கி, அந்த சிறுமியுடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு, பின் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
இதனால், அந்த சிறுமி மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டின் பிரதமரான மோடி, பாதுகாப்பு அம்சங்களை மீறி, காரை விட்டு இறங்கி, சிறுமியுடன் பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - TN,இந்தியா
18-ஏப்-201715:33:41 IST Report Abuse

Indianவிவசாய மண்ணில் கெமிக்கல்களை கொட்டி அதன் வளத்தை அழிப்பதை நடத்தி, மாட்டு சாணம், கோமியம், வேம்பு இவற்றை பயன்படுத்தி மண் வளத்தை மீட்டு எடுங்கள். கெமிக்கல் உரங்களை அடியோடு அழியுங்கள். வியாதிகள் மெல்ல காணாமல் போகும். நாடு உங்களுக்கு கடமைப்பட்டதாகும்.

Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
18-ஏப்-201714:45:12 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், டாக்டர்கள், குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. //// குறைந்த விலையிலான மருந்தை எழுதி தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது .... ஆகவே இது அர்த்தமற்ற பேச்சு ......

Rate this:
Joy Louis - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201713:52:50 IST Report Abuse

Joy Louisமுதலில் டாக்டர்கள் க்ளினிக்கினுள் மருந்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், அங்குதான் லாபம் கருதி விலை உயர்வான , தரம் மலிவான மருந்துகள் விற்கப் படுகின்றன, இது போன்ற பல இடங்களில் மருந்தாளுனர் கூட இல்லாமல் செவிலியரை வைத்து மருந்து கொடுக்கப்படுகிறது. அரசு உத்தரவு படி மருந்தை நோயாளிக்கு கொடுக்கும் உரிமை மருந்தாளுனருக்கே உள்ளது.. அரசு உத்தரவு காற்றில் பறக்கிறது...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X