பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பிரதமர், அமைச்சர்கள் ஹிந்தியில்
உரையாற்ற ஜனாதிபதி ஒப்புதல்

புதுடில்லி: அதிகாரபூர்வ மொழிகளுக்காக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் குழுவின் பரிந்துரைகளை ஏற்ற, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஹிந்தியில் உரையாற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.

  பிரதமர், அமைச்சர்கள் ஹிந்தி  உரை , ஜனாதிபதி ஒப்புதல்

கடந்த, 1959 முதல், அதிகாரபூர்வ மொழிகளுக்கான பார்லிமென்ட் குழு, ஒன்பது அறிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது; ஹிந்தி மொழியை பிரபலப்படுத்த, மத்திய, மாநில அளவில்

எழுந்த விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 2011ல், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தலைமையில், இக்குழு, 117 பரிந்துரைகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் சமர்ப்பித்தது.

ஹிந்தி பயன்பாடு


வரும் ஜூலை மாதத்துடன், ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அவற்றில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஹிந்தி மொழியில் உரையாற்ற அனுமதி, ஏர் இந்தியா விமான டிக்கெட்டில் ஹிந்தி பயன்பாடு, விமான பயணிகளுக்காக ஹிந்தி செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களை வழங்குதல், அரசு உதவிபெறும் தனியார் நிறுவனங்களில், ஹிந்தி மொழியை பேச்சு வழக்கு

Advertisement

மொழியாக்குவது கட்டாயம் உட்பட, பல பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே, பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெரும்பாலானோர் ஹிந்தியில் உரையாற்றி வருகின்றனர். ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்த விபரங்கள், பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendra Babu R - Chennai,இந்தியா
19-ஏப்-201702:47:34 IST Report Abuse

Mahendra Babu Rவட இந்தியர்கள் தமிழ் கற்றுக்கொண்டுவிட்டால் பிறகு அதை விடவே மாட்டார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவை மிகுந்த மொழி தமிழ். குழந்தைக்கு வெல்லத்தை நாக்கில் தடவினால் தானே தெரியும் அதன் சுவை. பின் குறிப்பு: எனக்கு இந்தி படிக்க, எழுத தெறியும். என்ன பழக்கமில்லாததால் சரளமாக பேச வராது அவ்வளவுதான்.

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
18-ஏப்-201723:11:53 IST Report Abuse

VOICEஆங்கிலம் ஹிந்தி தெரிந்திருந்தால் கூட தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும். நாமும் நமது வரும்கால தமிழ் சமூகம் வாழவேண்டும் எனில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் எனில் முழுமையாக தமிழில் பேசவும் முக்கியமாக எழுதவேண்டும். ஆங்கிலம் தேவைபட்டால் பேசவும். ஹிந்தி தெரிந்தால் கூட தமிழ்நாட்டில் பேசுவதை தவிர்க்கவும். தமிழ்நாட்டில் கார்பொரேஷன் வங்கி ஒன்று உள்ளது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச தெரியாத வடஇந்திய சேர்ந்தவர்களை முழுவதுமாக தமிழ்நாட்டில் பணியமர்த்துகின்றனர். சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தடை செய்ய பட்டதில் வடநாட்டை சேர்ந்த கார்பொரேட் நிறுவனம் தமிழ்நாட்டில் சேர்ந்த தொழில்அதிபர்கள் வளர விடக்கூடாது என்று சதி செய்து தடை செய்தது, அதற்கு இன்று இருக்கும் மத்திய அரசியில் உதவியது. ஆனால் நம் அங்கேயிருந்து வருபவர்களை வேலைக்கு அமர்த்துகிறோம். இவர்களால் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர் மற்றும் பிஜேபி காங்கிரஸ் இவர்கள் மூலம் நாளை தமிழகத்தில் ஆட்சி பிடிக்க அஸ்திவாரம் போடுகின்றனர். வரப்போகும் ஆபத்து தெரியுதா தமிழ்நாடு கூமுட்டை அரசியல்வாதிகள் அவர்களுக்குள் பணத்துக்கும் பதவிக்கும் சண்டை போட்டுகொண்டு இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் தமிழ் பேச எழுத தெரிந்தோரை நியமிக்கவும்.

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
18-ஏப்-201723:00:15 IST Report Abuse

Mohan Nadarஇந்த மத்திய ஆட்சிக்கு எமன் மதமா, மொழியா அல்லது சாதியா ??

Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X