சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனை சிக்க வைத்த சுகேஷ் சந்தர் யார்?
சென்னை போலீசார் திடுக் தகவல்

'டில்லியில் கைதான, சுகேஷ் சந்தர், சென்னையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் எனக்கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டவன்' என, போலீசார் தெரிவித்தனர்.

தினகரன், சிக்க,  சுகேஷ் சந்தர், யார்?

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவன் சுகேஷ் சந்தர், 2௭; எம்.பி.ஏ., படித்துள்ளதாக கூறினாலும், பிளஸ் 2 படிப்பை பாதியில் கைவிட்டவன் என, டில்லி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
விலை உயர்ந்த கைக்கடிகாரம், வெளிநாட்டு கார்கள் மீது மோகம் கொண்டவன். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இவன், 'கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் உறவினர்' என, கூறி வந்துள்ளான்.

காதல் வலையில் வீழ்த்தினான்


இதன்பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல நடித்த சுகேஷ், இணையத்தில், கர்நாடக அரசு, டெண்டர் தொடர்பாக வெளியிடும் தகவல்களை அறிந்து, தொழில் அதிபர்கள் பலருக்கு, அரசிடம் டெண்டர் வாங்கி தருவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளான்.
அப்போது, பெங்களூரில் மருத்துவ கல்லுாரியில் படித்து வந்த, லீனா மரியா பால், 25, என்ற மாணவியிடம், சினிமா பட இயக்குனர் என, அறிமுகமாகி, காதல் வலையில் வீழ்த்தினான். பெற்றோர், துபாயில் வசித்து வந்ததால், தனிமையில் இருந்த லீனாவுடன், சுகேஷ் உல்லாசமாக ஊர் சுற்றினான்.

போலீசார் சல்யூட் அடித்து..


பின், லீனா, 'மெட்ராஸ் கபே, ரெட் சில்லிஸ்' போன்ற மலையாள படங்களில் நடித்ததோடு, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்தார். இருவரும், திருமணம் செய்து, குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக முடிவெடுத்து, மோசடி தொழிலில் இறங்கி உள்ளனர். இதனால், இருவரையும், கர்நாடக போலீசார் தேடினர்.
சென்னைக்கு, 2013ல், காதலியுடன் வந்த சுகேஷ், ஐந்துநட்சத்திர ஓட்டல்களில் தங்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல, சைரன் வைத்த கார்களில் சுற்றினான். அவனுக்கு, போலீசார் சல்யூட் அடித்து, ராஜமரியாதை அளித்த வேடிக்கை சம்பவங்களும் அரங்கேறின. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போல நடித்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என, பல மாநில தொழில் அதிபர்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளான்.

சுகேஷ், காதலி லீனாவுடன் சேர்ந்து, அம்பத்துார் கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம், 19 கோடி ரூபாய் கடன் வாங்கியும் மோசடி செய்துள்ளான்.

இதுகுறித்து, அந்த வங்கியின் துணை பொது மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதேபோல், சேலையூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம், 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் பதிவானது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, டில்லியில், பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த, சுகேஷ், லீனாவை, சுற்றி வளைத்தனர். அப்போது, லீனா மட்டும் கைதானாள். சுகேஷ் தப்பி விட்டான். இதன்பின், மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த அவனை, டில்லி போலீசார்கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.இந்த மோசடி மன்னன் வித்தை குறித்து, சென்னை போலீசார் கூறியதாவது:

உல்லாச வாழ்க்கை :


டில்லி போலீசார் கைது செய்துள்ள, சுகேஷுக்கு, பாலாஜி, சேகர் ரெட்டி, சுகாஷ் சந்திரசேகேர் என, பல பெயர்கள் உண்டு.

Advertisement

சென்னையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் எனக்கூறி, சொகுசு கார்களில் வலம் வந்தான்.தொழில் அதிபர்களை சந்திக்கும் போது, லீனாவை, கவர்ச்சி உடையில் வரச்சொல்வான். நடிகையான அவளை காட்டியே, பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்துள்ளான். அவன், சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா என, பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளான்.

கோடிகளில் மோசடி செய்யும் அவன், விபத்து ஒன்றில் சிக்கி, இடது கையில் நான்கு விரல்களையும் இழந்தான். பல்வேறு இடங்களில், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில், காதலியுடன் தங்கி உல்லாச வாழ்க்கையில் மிதந்தான்; இதனால், லீனா கர்ப்பமானாள்.

அவளை நாங்கள் கைது செய்தபோது, கருவை கலைத்து இருந்தது தெரிய வந்தது. அப்போது, ஒன்பது சொகுசு கார்கள், இரண்டு வைர மோதிரங்கள், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வைர கம்மல், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேக், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் நேபாளம், பூடான் நாடுகளின் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜாமினில் வெளியே வந்த லீனா, மீண்டும் சினிமாவில் நடித்து வந்தாள். சுகேஷ், இடைத்தராக செயல்பட்டு, தற்போது சிக்கி உள்ளான். இவ்வாறு போலீசார் கூறினர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
18-ஏப்-201719:43:09 IST Report Abuse

S Rama(samy)murthyVedru.Varada - Vannarapettai.. ,பெலாரஸ் உனது கருத்து பிணைத்தலை பார்த்தேன் . தற்பொழுது கான் -கிராஸ் , சீனா அடிவருடி , பச்சைக்கமாலை காரன் ஆட்சி இல்லாததால் தான் பிடி படுகிறான் . இனி எல்லோருக்கும் இருக்கு ஆஆஆ ப்பு சுபராம காரைக்குடி

Rate this:
mukundan - chennai,இந்தியா
18-ஏப்-201716:45:03 IST Report Abuse

mukundanசதுரங்க வேட்டை - Part 3 கதை ரெடி...

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
18-ஏப்-201713:24:32 IST Report Abuse

Sahayamதிட்டமிட்ட நாடகம் போல தெரியுது.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X