அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு:
பன்னீர் - தம்பிதுரை வரவேற்பு

அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டி உள்ளார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 அ.தி.மு.க., அணிகள் இணைப்பு  வரவேற்பு


சசிகலா குடும்பத்திற்கு எதிராக, அமைச்சர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வருகின்றனர். விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.சென்னையில், நேற்று பகல், 12:20 மணிக்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலகம் வந்தார்; முதல்வரை சந்தித்து பேசினார்; பகல், 2:15 மணிக்கு வெளியில் சென்றார்.
மீண்டும் மாலை, 3:30 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார். முதல்வர் அறைக்கு சென்று, முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். காலை மற்றும் மாலை நடந்த சந்திப்பின் போது, மூத்த அமைச்சர்களும் உடனிருந்தனர்.
சந்திப்புக்கு பின், தம்பிதுரை கூறியதாவது:

அ.தி.மு.க.,வில், எந்த பிளவும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து, தேர்தல் கமிஷனில், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்.
அ.தி.மு.க., எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது; ஜெ.,வால் பாதுகாக்கப்பட்டது; நல்ல ஆட்சியை தருகிறது. ஜனநாயகத்தில், சில கருத்து வேறுபாடு இருக்கலாம். அதை சரி செய்து, ஜெ., தந்த ஆட்சியை தக்க வைத்து, நாட்டு மக்களுக்கு நல்லது செய்வது, நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.இதை, அ.தி.மு.க., தொண்டர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர். ஜெ., தன் உடலை வருத்தி, இந்த ஆட்சியை தந்துள்ளார். அதை தக்க வைப்பது, மிகவும் முக்கியம்.
கருத்து வேறுபாடு உண்டு; அதை சரி செய்ய பேசலாம். கருத்து வேறுபாடுடன் சென்றவர்கள் கூறினால் பேசத் தயார். அழைப்பு விடுக்க, எனக்கு அதிகாரம் கிடையாது. எம்.பி., என்ற முறையில், என் கருத்தை கூறுகிறேன். கருத்து வேறுபாடு, ஜனநாயகத்தில் இயற்கை; அதை மறந்து, ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
தினகரன் மீதான டில்லி வழக்கு பற்றி, எனக்கு தெரியாது. இரட்டை இலை மீண்டும் எங்களுக்கு கிடைக்கும். எந்த தேர்தல்

வந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கிடைக்கும். அதற்கு ஒற்றுமையாக செயல்படுவோம். அணி என்பது இல்லை. அவர்களும் அணி என்று சொல்லவில்லை. இரட்டை இலை முடக்கப்படவில்லை.
எல்லாரும் இணைந்து செயல்பட வேண்டும் என, பன்னீர்செல்வம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. கட்சியில், மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளனர். அனைவரும் இணைந்து பேசுவர். ஜெ., கொடுத்த ஆட்சி தொடர வேண்டும். அதற்குஅனைவரும், ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் குறித்த கேள்வி தவிர்ப்பு!தலைமை செயலகத்தில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தினகரன் தொடர்பான கேள்விகளுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்தார்.
'பன்னீர் அணியுடன் பேச்சு நடைபெறுவதாக இருந்தால், தினகரன் தலைமையில், பேச்சு நடைபெறுமா' என, கேட்டதற்கு, ''கட்சியில் மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளனர்; அவர்கள் பேசுவர்,'' என, பதில் அளித்தார்.

சசி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர திடீர் உத்தரவு


'அ.தி.மு.க., சசிகலா அணி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இன்று சென்னைக்கு வர வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருப்பது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு, பன்னீர் அணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து, ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள போர்க்கப்பலை பார்வையிட, அ.தி.மு.க., சசிகலா அணி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இன்று காலை சென்னை வரவேண்டும் என, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, தொலைபேசி வழியே, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை வரும், எம்.எல்.ஏ.,க்களுடன், இரு அணிகள் இணைப்பு குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனைஅ.தி.மு.க.,வின் இருஅணிகளையும் இணைப்பதால் ஏற்படும், சாதக, பாதக பலன்கள் குறித்து, முதல்வர் தலைமையில் நடந்த, ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பங்கேற்றார்.

Advertisement

கூட்டத்தில், இரு அணியும் இணைவதால் ஏற்படும், சாதக, பாதக பலன்கள் குறித்து விவாதித்துள்ளனர். முதல்வராக யார் இருப்பது, துணை முதல்வராக யார் இருப்பது, இரு அணியில் யாரை எல்லாம் அமைச்சர்களாக நியமிப்பது என்பது குறித்து ஆலோசித்து, சில முடிவுகளை எடுத்துள்ளனர். அதை பன்னீர் அணிக்கு தெரிவித்து, அவர்கள் ஏற்றுக் கொண்டால், இரு தரப்பினரும் வெளிப்படையாக பேச்சு நடத்துவது என, முடிவு செய்திருப்பதாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பன்னீர்செல்வம் தயார்!


''தினகரன் தரப்பில் இருந்து, இதுவரை பேச்சுக்கு யாரும் அணுகவில்லை; பேச அழைத்தால், தயாராக உள்ளோம்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.மதுரை செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:எங்களுக்கு, இரட்டை இலை சின்னம் கிடைக்கும். டில்லி போலீசாரின், தினகரன் மீதான வழக்கு பதிவு குறித்து, எனக்கு முழு விபரங்கள் கிடைத்த பின், அது குறித்து பேசுகிறேன். தினகரன் அணியில் இருந்து, இதுவரை பேச்சுக்காக, எங்களை அணுகவில்லை. அப்படி அணுகினால், நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் வருவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த பேச்சுக்கு, எந்த நிபந்தனைகளும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., வலைவிரிப்பு!


ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், என்ன முடிவெடுப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் எத்தனை பேர் என்ற முழு விபரமும் தெரியவில்லை. இதற்கிடையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தி.மு.க., தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க., திட்டத்தை முறியடிக்க, தினகரன் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேசி, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் முயற்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
18-ஏப்-201720:49:41 IST Report Abuse

G.Prabakaranஇரு அணிகளும் சேர வாய்ப்பில்லை. தினகரன் கைது ஆனாலும் சசி குடும்ப தலை ஈடு இல்லை என்றாலும் பன்னீர் அணியை ஒருபோதும் எடப்பாடி அணி சேர்க்காது. இனி வரும் நான்கு ஆண்டுகளும் முடிந்தவரை கொள்ளை அடித்து விட்டு தேர்தல் நெருங்கும் வேளையில் வேண்டுமானால் சேர்வதை பற்றி மீண்டும்பேசுவார்கள். இந்த முயற்சி இன்னும் ஓரிருநாளில் அப்படியே அமுங்கிவிடும்.

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஏப்-201719:42:58 IST Report Abuse

Rafi அ தி மு கவை கபளீகரம் செய்ய காய்கள் பலமாக நகர்த்த பட்டுக்கொண்டிருக்கு. இரண்டாம் கட்ட தலைவர்களை அம்மா அடையாளம் காட்டாமல் சென்றுவிட்டார். அடிமை பட்டு கிடந்தர்வர்கள் இப்போது அடக்குமுறைக்கும் வித்தியாசம் தெரியாமல் மந்த நிலையிலேயே இருக்கின்றார்கள். மக்கள் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201713:51:03 IST Report Abuse

Yaro Oruvanபன்னீர் உருப்படணும்னா சில ஜந்துக்களை கூட சேக்கப்புடாது

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X