அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுகேஷ் யாரென்றே தெரியாது: தினகரன்

Added : ஏப் 18, 2017
Advertisement

சென்னை: ''டில்லியில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்பவர், யார் என்றே தெரியாது,'' என, சசிகலா அக்கா மகன் தினகரன் தெரிவித்தார்.

தினகரன் அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னத்தை பெற, நான் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுவது, தவறான தகவல். டில்லியில் கைது செய்யப்பட்ட, சுகேஷ் சந்திரசேகர், யார் என்றே தெரியவில்லை. எனக்கு எதுவும் புரியவில்லை. 'டிவி' பார்த்து தான் தெரிந்து கொண்டேன். என்னிடம் பணம் வாங்கினார் என்றால், எங்கு வாங்கினார்?
இதன் பின்னணி புரியவில்லை. இப்பிரச்னையை, சட்டப்படி சந்திப்பேன். என் வாழ்க்கையில், சுகேஷ் சந்திரசேகர் என, யாரிடமும் பேசியதில்லை. வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்களிடம் பேசி உள்ளேன். அ.தி.மு.க.,வை அழிப்பதற்காக, இது போன்ற தகவலை பரப்புகின்றனர்; அது, யாருடைய திட்டம் என, தெரியவில்லை. சசிகலாவை சந்திக்க, பெங்களூருக்கு புறப்பட்ட போது, 'டிவி'யில் செய்தி பார்த்தேன். இது தொடர்பாக, போலீசாரிடம் இருந்தும், எந்த தகவலும் வரவில்லை. சிறையில் சசிகலாவை சந்தித்து, கட்சி செயல்பாடுகள் குறித்து பேச உள்ளேன். என்னுடன், 1,000 பேர் போனில் பேசுவர்; 1,000 விஷயங்கள் சொல்வர்; எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுவர். அந்த நேரத்தில், சரி என்போம். அதற்காக, பேசிய எல்லாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, ஆவணங்கள் எதையும், அமைச்சர்கள் அழிக்கவில்லை. மூன்று அமைச்சர்கள் மீது, போலீசார் தொடர்ந்துள்ள வழக்கை, சட்டப்படி சந்திப்பர். கட்சியில், பிரச்னை எதுவும் இல்லை. என்னை விலகும்படி, அமைச்சர்கள் யாரும் கூறவில்லை. விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படியும், யாரும் வற்புறுத்தவில்லை; அவரிடமும், யாரும் பேசவில்லை. இவ்வாறு தினகரன் கூறினார்.

பெங்களூரில் தங்கியுள்ளார் : சென்னையிலிருந்து வர தாமதம் ஆனதால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தினகரனால் நேற்று சந்திக்க முடியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, அ.தி.மு.க., துணை பொது செயலர், தினகரன் நேற்று பகல், 3:30 மணிக்கு சந்திப்பதாக இருந்தது. இதற்காக, சென்னையிலிருந்து காரில் கிளம்பிய அவர், காஞ்சிபுரம் அருகே, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மாலை, 5:30 மணிக்கு தான் பெங்களூரு வந்தார். சிறையிலுள்ள குற்றவாளிகளை சந்திப்பதற்கு மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால், சிறை பகுதிக்கு வராமல், தினகரன் ஏமாற்றத்துடன் திரும்பினார்.பெங்களூரில் தங்கியிருக்கும் அவர், இன்று மதியம், சசிகலாவை சந்திப்பார் என, கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், நேற்று மீண்டும் சந்திக்க முயன்றார்; எனினும், முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X