கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஸ்டாலின் தேர்தல் செலவு 1 கோடி ரூபாய்க்கும் அதிகம்'

சென்னை : சென்னை, கொளத்துார் சட்டசபை தேர்தலின் போது, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், ஸ்டாலின் செலவு செய்துள்ளார்' என, அ.தி.மு.க., வேட்பாளர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வாதாடினார்.

ஸ்டாலின், தேர்தல், செலவு, 1 கோடி, ரூபாய், அதிகம்

கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, கொளத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் ஸ்டாலின், அ.தி.மு.க., சார்பில் துரைசாமி போட்டியிட்டனர். இதில், 2,734 ஓட்டுகள் அதிகம் பெற்று, ஸ்டாலின் வெற்றி பெற்றார்.இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைசாமி, தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு, நீதிபதி வேணுகோபால் முன், விசாரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகி, துரைசாமி,ஸ்டாலின், தேர்தல் ஆணையர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடந்தது.

ரூ.1 கோடிக்கு மேல் செலவு


தற்போது, இந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. துரைசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர், டி.வி.ராமானுஜம், வழக்கறிஞர், சவுந்தரராஜன் ஆஜராகினர்.
அவர்கள் வாதாடியதாவது: தேர்தலின் போது, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், ஸ்டாலின்செலவு செய்துள்ளார். அதற்கு ஆதாரமாக, 'சிடி'க்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 3.25 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக, ஸ்டாலின் தரப்பில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.நில அபகரிப்பு

Advertisement

செய்ததாக, துரைசாமிக்கு எதிரான துண்டு பிரசுரம், ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், துரைசாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது. வரம்பு மீறி, தேர்தலில் செலவு செய்ததால், ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது. இவ்வாறு வாதாடினர்.
பின், ஸ்டாலின் தரப்பில் வாதாட, அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, 19க்கு, நீதிபதி வேணுகோபால் தள்ளி வைத்தார்.



Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஏப்-201722:07:11 IST Report Abuse

Rockie-பாலியல் ஜனதா கட்சி அட நீதி தேவதைகளா, இது தானா உங்க டக்கு... இன்னும் இருபது வருடம் இழுத்தடியுங்கள்...

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
18-ஏப்-201719:52:20 IST Report Abuse

Gopalakrishnanபாவம் எங்கள் தலைவர் ரொம்ப ஏழை சாதாரண ஜனங்களுக்கு தலைவரின் காஞ்சி தொட்டி களஞ்சியம் தான் .... வாழ்க ஜனநாயகம் ....

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
18-ஏப்-201719:46:06 IST Report Abuse

சுந்தரம் அது சரி அந்த ஜெ ராதாகிருஷ்ணன் வூட்டுல சிக்கியது எவ்வளவு? தினமலர் மௌனம் சம்மதத்தின் அறிகுறிதான். ஒருவேளை சிக்கினத்துல தினமலருக்கு எதுனாச்சும்....? எல்லாம் பெரிய இடத்து விஷயம், நமக்கெதுக்கு வம்பு? இப்படி நாம கருத்து எழுதுனா, வம்பு அப்படீங்குற ஒரு சொல் மட்டும் நான் கருத்து எழுதுன மாதிரி தினமலர் வெளியிடும். குத்தமுள்ள நெஞ்சு நாம குறை சொல்லவா முடியும்.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X