அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.,- இடைப்பாடி கைகோர்க்க முடிவு! : அமைச்சர்கள் அறிவிப்பு ; நள்ளிரவில் பரபரப்பு

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னையில் நேற்றிரவு அமைச்சர் தங்கமணி இல்லத்தில் திடீர் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், ஓ.பி.எஸ்., அணியுடன் இணைந்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக செயல்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என, அறிவித்தனர்.

ஆர்.கே., நகர் தொகுதியில், அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரித்துறையின் ரெய்டு, தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு, மூத்த அமைச்சர்கள் நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ள, 'இரட்டை இலை' சின்னத்தைப் பெற பல கோடி ரூபாய் லஞ்சம் தர முற்பட்டதாக தினகரன் மீது, டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் வழங்க சென்னை விரைந்துள்ளனர்.

இதனால், தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் எழுந்துள்ள நிலையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமியை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இரு முறை சந்தித்து பேசினார். அனைத்து எம்.எல்,ஏ.,க்களும் இன்று சென்னை வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திடீர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், சண்முகம், ஓ.எஸ். மணியன், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மூத்த அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில் இரு அணிகளும் இணைவது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று, தினகரனின் தீவிர ஆதரவாளரான அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் தனியாக ஆலோசனை நடந்தது. இதனால், நேற்று நள்ளிரவு வரை பரபரப்பு நிலவியது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின், அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: இன்று இரு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்டம் வாரியாக சேகரித்து வருகிறோம்.. மேலும் இன்று காலை (நேற்று) ஓ.பி.எஸ்., விடுத்த அறிவிப்பில், அ.தி.மு.க.,வை ஒற்றுமையுடன் நடத்திட அழைப்பு விடுத்தார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அதை வரவேற்றுள்ளார்.

எனவே, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக செயல்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்தோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இந்த முடிவினை ஆதரித்து ஒற்றுமையாக செயல்படுவர். தினகரன் பெங்களூருக்கு சென்றிருப்பதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் பங்கற்கவில்லை. அவர் வந்ததும், எங்களது முடிவை தெரிவிப்போம்.

இவ்வாறு, அவர் கூறினார். உடன், அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,ஆஸ்திரேலியா
18-ஏப்-201707:33:28 IST Report Abuse
manivannan தமிழ் நாடு செய்தி என்று பார்த்தா கடந்த ஆறு மாசமா ஒரு நல திட்டமோ, வளர்ச்சி திட்டமோ, ஒரு உதவிகள் திட்டமோ, கல்வி, மருத்துவ வளர்ச்சி திட்டமோ, விவசாயிகளுக்கான தீர்வுகளோ, ஒண்ணுமே கிடையாது.. ஏதோ ஜல்லி கட்டு வந்தது.. அதுவும் பெரிய அளவில் நல திட்டம் கிடையாது.. பூரா பூரா தினகரன், சசிகலா, போ தோட்ட வீடு, சொத்து விவகாரம், வி பா விவகாரம், ஆர் கே நகர் ப ப வா டா ,, ப அக் ஜெயில் ன்னு என்ன தமிழ் நாட்டுகாரங்களை பாத்தா இந்த அரசியல் வாதிகளுக்கு பயித்தியங்கள் போல தெரிகிறதா... யார் வரி பணம் ஆறு மாசமா அரசு பணிகள் நடக்காமல் தூங்குவது சம்பளம் எல்லாம் தமிழனின் வியர்வை... எதாவது நலத்திட்டத்திற்கு நடு இரவு வரையில் விவாதித்துள்ளதாக செய்தி உண்டா... சீக்கிரம் இதெற்கெல்லாம் முடிவு கட்டி விட்டு முறையாக அரசு செயல் படா விட்டால் நம்ப இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டும்... அரசியல்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.. செய்வீர்களா... செய்வீர்களா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X