அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரு அணிகளும் விரைவில் இணையும்: அமைச்சர்கள் முடிவு

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement

அ.தி.மு.க., - சசிகலா அணியில் உள்ள, முதல்வர் பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்க, சசிகலா குடும்பத்தினரை, கட்சியை விட்டு விலக்குவது; பன்னீர் அணியுடன் இணைந்து செயல்படுவது என, முடிவு செய்துள்ளனர்.

சென்னையில், நேற்று காலை, முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன் உட்பட சிலர், சசிகலா குடும்பத்தை விலக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சசிகலா இல்லாத கட்சியை, என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை' என, செங்கோட்டையன் கூறியுள்ளார். அதற்கு, மற்ற அமைச்சர்கள், 'சசிகலா குடும்பத்தை வைத்துக் கொண்டு, உள்ளாட்சி தேர்தலில், மக்களிடம் ஓட்டு கேட்டு செல்ல முடியாது. அவர்களை விலக்கினால் மட்டுமே, மக்களை சந்திக்க முடியும்' என தெரிவித்துள்ளனர்.
அதை ஏற்று, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இரவு, 9:00 மணிக்கு, அமைச்சர் தங்கமணி வீட்டில், மீண்டும் அமைச்சர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். அதில், தினகரன் ஆதரவு அமைச்சர்களான, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். இரவு, 11:00 மணி வரை, ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்தும், தேர்தல் கமிஷனில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசித்தோம். இரு அணிகளும் இணைவதற்காக, பன்னீர்செல்வம் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அந்த கருத்து வரவேற்கத்தக்கது. கட்சி தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது, ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பது தான். அதன்படி, கட்சியை வழிநடத்த, என்ன செய்யலாம் என்றும், ஆலோசனை நடத்தப்பட்டது. தினகரன் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஜெ., ஆட்சி தொடர வேண்டும்; இரட்டை இலை கிடைக்கப் பெற வேண்டும் என்ற கருத்தில், அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். இது ரகசிய கூட்டம் அல்ல. அ.தி.மு.க., தொண்டர்களின் முடிவே, அனைவருடைய ஒட்டுமொத்த முடிவாக இருக்கும். பன்னீர்செல்வமும் எங்கள் குடும்பம் தான். கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர்; அனைத்தும் சரியாகி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SACHIN -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201702:19:13 IST Report Abuse
SACHIN makkallai muttallakiathu podavillaiyya.Innamuum muttaalaga Thamizhaga makkall irukkamattaargall.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X