அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அவசர நிலை : மத்திய அமைச்சர் சந்தேகம்

Added : ஏப் 18, 2017
Advertisement

நாகர்கோவில்: ''தமிழக அரசின் செயல்பாடுகள் அவசர நிலையை நோக்கி செல்வதாக தோன்றுகிறது,'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மார்த்தாண்டத்தில் அவர் கூறியதாவது: இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டில்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள அவமானம். சில நாட்களாக தமிழக அரசின் செயல்பாட்டை பார்த்தால் ஏதோ அவசர நிலையை நோக்கி இந்த அரசு செல்வதாகதான் தோன்றுகிறது. தேர்தலில் பணம் கொடுக்கும் கட்சியின் தலைவர் மற்றும் கொடுத்த நபர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் விவசாயிகளுக்கானது அல்ல. அடுத்து வர இருக்கும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கூட்டப்பட்ட கூட்டம். டில்லியில் போராடும் விவசாயிகளை நான் ஐந்து முறை சந்தித்து பேசி விட்டேன். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X