அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்கு தயார் : ஓ.பி.எஸ்.,

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (30)
Advertisement
ADMK,Chennai,Panneerselvam,அ.தி.மு.க,சென்னை,பன்னீர்செல்வம்

தேனி: அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் என ஓ.பி.எஸ்., கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அதிமுக என்பது எம்ஜிஆர். ஜெ., உருவாக்கிய கட்சி இது ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் செல்லக்கூடாது என்பது தொண்டர்களின் எண்ணம் . சசி அணி தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு எங்களை சந்தித்தால் நாங்கள் பேச்சு நடத்த தயார் . இவ்வாறு ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.


அதிமுக பிளவு தொடர்பாக நேற்று(ஏப்.,17) இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் தினகரனுக்கு ஆதரவான அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டில் ஆலோசனை நடத்தினர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேனி சென்றிருந்த பன்னீர் செல்வம், இன்று(ஏப்.,18) மாலை சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashwin K - tirunelveli,இந்தியா
18-ஏப்-201713:46:58 IST Report Abuse
Ashwin K எதை குறித்து பேச போறீங்க யாருக்கு என்ன இலாகா எவ்வளவு எப்படி சம்பாதிக்கலாம் ஜெயலிதாஅம்மையாரின் சொத்து பணம் எப்படி எடுக்க வேற என்னத்த பேச போறீங்க அது எப்படி அப்பா உங்க கிட்ட மட்டும் நோட்டு கட்டுகள் குவிச்சு வைச்சு இருக்கீங்க நாட்டு மக்கள் நாலு காசு சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறான் நீங்க என்னடான்னா எந்த வேலையும் பாக்காமல் அசால்ட்டா சம்பாதிக்கிறீங்க. இதுல மத்திய அரசு கருப்பு பணத்தை தடுத்தாச்சு என்று கூசாமல் பேசுறாங்க. தமிழக மக்களை பற்றி உங்க யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை உங்க பதவி சம்பாத்தியம் இது மட்டும் தான் உங்க குறிக்கோள். பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு காலம் மாறும் காட்சிகளும் விரைவில் மாறும் ஒரு புதிய எழுச்சி உருவாகும்
Rate this:
Share this comment
Cancel
Ashwin K - tirunelveli,இந்தியா
18-ஏப்-201713:36:47 IST Report Abuse
Ashwin K என்னத்த பத்தி பேச போறீங்க ஜெயலலிதா மரணத்தை யா அல்லது யாருக்கு என்ன பதவி என்றா அல்லது தினகரன் சசிகலா இவங்க கிட்ட உள்ள பணம் ஆஸ்தி யாருக்கு எவ்வளவு பங்கு என்றா இனி உள்ள காலங்களில் எப்படி சம்பாதிப்பது என்றா இதை பத்தி தான்வேற என்ன இருக்க போகுது நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் இங்குள்ள யாருக்கும் அக்கறை கிடையாது அது தான் உண்மை அது எப்படி உங்க கிட்ட மட்டும் 2000 ரூபாய் கட்டுகள் குமிந்து கிடக்கு. உங்களுக்கு என்று தனியாக reserve பாங்கில பிரிண்ட் பண்ணி குடுக்கங்களா கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று வாய் கிழிய முழக்கமிடும் மத்திய அரசும் வேடிக்கை தான் பார்க்கிறது சாமானியனுக்கு தான் சட்டம் நேர்மை ஒழுக்கம் எல்லாம் போலும். மக்கள் படுகின்ற கஷ்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . கேட்பார் இல்லாமல் போய்விட்டது தமிழகம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-ஏப்-201713:03:24 IST Report Abuse
தமிழர்நீதி பிஜேபி பினாமி பன்னீர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X