அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரு அணிகள் இணைப்பு: முதல்வர் ஆலோசனை

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (37)
Advertisement
அதிமுக, பழனிசாமி, செங்கோட்டையன்

சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு துவங்கியுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமியை, கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு அணிகளும் இணைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


இதனிடையே, ஓ.பி.எஸ்., அணியுடன் பேச, அதிமுக அம்மா அணி சார்பில் 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், ச ண்முகம் தங்கமணி , ஓஎஸ் மணியன், வேலுமணி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
18-ஏப்-201715:21:11 IST Report Abuse
N.Kaliraj எதற்கும் பெவிக்காலை கூடவே கொண்டுபோங்க....
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201713:27:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் OPS கண்டிப்பாக சாதிப்பார், அதாவது சசி குடும்பத்தை வெளியேற்றியே தீருவார். தினகரன் கொஞ்சம் திகரில் தன் சித்தி போல ஓய்வெடுக்கட்டும். OPS முதல்வர் , எடப்பாடி துணை முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ பத்தி ஏற்றுக்கொள்வது நல்லது. இனிமேலும் இதை இழுத்தடிக்காமல் வெற்றிகரமாக இணைப்பை முடித்து, நாட்டில் நிலவும் குடிநீர் பஞ்சம் மற்றும் விவசாய பிரச்சினைகளை கவனியுங்கள், மத்தியில் இணக்கமான போக்கை கடைபிடித்து தேவையான நிதியை பெறுங்கள். இதுதான் இப்போதைய தேவை.
Rate this:
Share this comment
Cancel
Balaji - chennai  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
18-ஏப்-201712:25:29 IST Report Abuse
Balaji மூடர்களின் கூட்டம், இணைந்து கொள்ளையடிக்க தயாராகிவிட்டது. தி்முக எப்படியாவது ஆட்சியை கவிழ்த்துவிட்டு தாங்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளைஅடிக்கலாம் என்று எதி்ர்பார்த்தனர், ஆனால் அடுத்து நான்கு வருடத்தி்ற்கு பொது தேர்தல் வராது அப்படியே வந்தாலும் தி்முக ஆட்சியில் அமராது அப்படி அமர்ந்தாலும் பிஜேபி யை மீறி ஊழல் புரிய முடியாது என்பதை அறிந்தவுடன் தி்முக நிர்வாகிகள் ஸ்டாலினை பிரபலப்படுத்த பணத்தை வாரி இரைப்பதை குறைத்துக்கொண்டமாதி்ரி தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X