அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (41)
Advertisement
தினகரன், இணைப்பு, சாத்தியமா, இரு அணிகள், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், சண்முகம், கடம்பூர் ராஜு

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, 'தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதற்கு ஏற்றவாறு, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இன்று காலை அவரை சந்தித்து பேசி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பல பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின. மதுரை செல்வதற்கு முன் நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'இரு அணிகளும் இணைய நிபந்தனை ஏதும் இல்லை 'என்றார். ஆனால், அவரது அணியை சேர்ந்த மதுசூதனன், 'ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களிடம் கட்சி சென்று விட கூடாது' என, கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று இரவு, 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு அதிகம் என்றே கருதப்பட்டது.
தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு:

எனினும், தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தனர். தினகரனுக்கு ஆதரவாக இருந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நடுநிலை வகிக்க துவங்கினர்.
இந்த சூழ்நிலை இன்று காலை மாற துவங்கியது. பெங்களூருவிற்கு சென்று இருந்த தினகரன் நள்ளிரவே சென்னை திரும்பி, இன்று காலை முதல் அடையாற்றில் உள்ள வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த துவங்கினார். அவரை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்றனர்.
அவர்களுடன் தினகரன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு நடப்பதற்கு முன் நிருபர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், ' இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் சந்தோஷம் தான்' என்று மட்டும் பேசி, இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள டில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் முகாமிட்டு உள்ள நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தினகரன் தரப்பினர் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
ஒன்று சேர என்ன வேண்டும்?:

இப்போது உள்ள சூழ்நிலையில், இரு அணிகளும் சேர வேண்டும் என்றால், ஒன்று சசிகலா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது தேர்தல் ஆணையம் சசிகலா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். மூன்றாவதாக தினகரன் மேல் உள்ள, இரண்டு முக்கிய வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றால் ஒழிய, அனைவரும் விரும்பினாலும் இந்த இணைப்பு நடக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில், 'ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்' என்று எந்த நேரத்திலும் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இரட்டை இலை இல்லாமல், அ.தி.மு.க.,வினர் எந்த கால கட்டத்திலும் தேர்தலை சந்திக்க விரும்ப மாட்டார்கள். இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற இரு அணிகளின் இணைப்பு ஒன்றே சாத்தியம். இதை மனதில் வைத்து, தினகரனை மீறி அ.தி.மு.க.,வினர் முடிவு செய்வார்களா. அ.தி.மு.க.,வினர் எதிர்காலம் சில தினகரன் ஜால்ராக்களின் கைகளிலே உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201722:46:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதெல்லாம் பேதி வந்தவன் போட்ட டயப்பர் மாதிரி..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201722:31:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தினகரன் தரப்பினர் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இது தான் உண்மையும் கூட.
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201721:27:49 IST Report Abuse
ரங்கன் எல்லாம் நன்மைக்கே... இரு கழகங்களும் ஆண்டது போதும்...இந்தியா ஒரு நாடென அறிவோம்....தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, அசாமி, குஜராத்தி, மராட்டி, பெங்காலி என ரூபாய் நோட்டில் உள்ள அனைத்து மொழிகளும் கற்போம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X