பெங்களூருவில் 'தண்ணி காட்டிய' தினகரன்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (24)
Advertisement
தினகரன், சசிகலா, பெங்களூரு, சிறை, டில்லி போலீஸ்

பெங்களூரு: பெங்களூருவில் டில்லி போலீசார் கைது செய்ய வந்திருப்பதை தெரிந்து கொண்ட தினகரன், சசிகலாவை சந்திக்காமல், தமிழக எல்லையான அத்திப்பள்ளியுடன் திரும்பி வந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசியை சந்திக்க செல்வதாக கூறி தினகரன் பெங்களூரு சென்றார். ஆனால் சந்திக்காமல் சென்னை திரும்பினார்.


டில்லி போலீஸ் வருகை:

இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தினகரனை சந்திக்க அனுமதி கேட்டு சசி இன்னும் சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கவில்லை. சிறை விதிகளின்படி திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பார்வையாளர்களை சந்திக்க முடியும். இனி சசியை சந்திக்க வெள்ளி வரை தினகரன் காத்திருக்க வேண்டும். பெங்களூருவிற்கு நேற்று(ஏப்ரல்18) தினகரனை கைது செய்ய டில்லி போலீசார் முன்னறிவிப்பின்றி வந்தனர். சிறை வாசல் முன்பு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பெங்களூரு போலீசாரும் நிறுத்தப்பட்டனர். டில்லி போலீசார் பெங்களூரு வந்தது வேகமாக பரவ துவங்கியது.


சுற்றி வந்த கார்:

இதனையறிந்த தினகரன் பெங்களூரு சிறைக்கு வரவில்லை. 3.30 மணியளவில் சசி அணியை சேர்ந்த பெங்களூரு நிர்வாகிகள் மட்டும் சிறை வந்து சென்றனர். தினகரன் தனது சந்திப்பை 5.30 மணிக்கு மாறினார். 4.30 மணியளவில் தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு வந்த தினகரன், போலீசார் வந்த தகவல் தெரிந்து பெங்களூரு சிறை நோக்கி செல்லவில்லை. தினகரனுடன் வந்த தமிழக பதிவெண்(7777) கொண்ட கார் மட்டும் பெங்களூரு சென்று சசி அடைக்கப்பட்ட சிறை அருகே சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டது. அந்த காரிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. பின்னர் அந்த கார் சிறை வாசலை நீண்ட நேரம் சுற்றிவிட்டு அங்கிருந்து அத்திபள்ளி கிளம்பி சென்றது. 6 மணிக்கு மேல் சிறையில் யாரையும் சந்திக்க முடியாது என்பதால், தினகரனும் சசியை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
18-ஏப்-201719:02:30 IST Report Abuse
karunchilai கயமை.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-ஏப்-201718:04:40 IST Report Abuse
vnatarajan தினகரன் என்ன விஜய் மாலையாவா, இல்லை அத்திப்பள்ளி என்ன லண்டனா . ஏன் போலீஸ் அத்திப்பள்ளிக்கே சென்று கைது செய்திருக்கலாமே ஏன் டெல்லி போலீசுக்கு ஏதாவது கட்டுப்பாடு விதித்தாங்களா இல்லை பெங்களூரிலதான் கைது செய்ய வேண்டுமென்று மேல் அதிகாரிகள் உத்தரவு கொடுத்தார்களா
Rate this:
Share this comment
suuny - Chennai,இந்தியா
18-ஏப்-201719:00:45 IST Report Abuse
suunyஎஸ்...
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,ஆஸ்திரேலியா
18-ஏப்-201717:44:24 IST Report Abuse
manivannan ஆட்டம் முடிந்தது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X