அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணிகள் இணைய விருப்பம்: செங்கோட்டையன்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (19)
Advertisement
அணிகள் இணைப்பு, தொண்டர்கள் விருப்பம், செங்கோட்டையன், தினகரன், ஓ.பி.எஸ்.

சென்னை: இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தினகரனிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மாற்று அணியை ஒன்றாக இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் விரும்புகின்றனர். ஓபிஎஸ் அணியுடன் பேச குழு அமைக்க முயற்சி செய்து வருகிறோம். பரஸ்பரம் இரு அணிகளுக்கு இடையே தகவல்களை பரிமாறி கொள்ள வேண்டியுள்ளது. குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஓபிஎஸ் கருத்து குறித்து தினகரனிடம் கூறியுள்ளோம். பேச்சுவார்த்தை இன்னும் துவங்காத நிலையில், நிபந்தனைகள் குறித்து எப்படி கூற முடியும். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இதற்காக பிரமாண பத்திரம் தயாரித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. இரு அணிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
18-ஏப்-201717:11:15 IST Report Abuse
rajan.  இத்தனை ஆனப்புறம் இவனுங்களும் கட்யுசியும் ஏன் ஒழியாம சுத்திகினே இருக்கே. அடே சயனைட் மல்லிகா உன் வேலை சுத்தமில்ல ஊஹும் தேறாது.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஏப்-201717:08:11 IST Report Abuse
Rajendra Bupathi பன்னீரு பேச வேண்டிய அவசியம் இருக்கா என்ன? அப்படி ஒன்ணும் இல்லியே? அவரு சைடுதான் ஸ்ட்ராங்கா ஆயுடுச்சே?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஏப்-201717:07:13 IST Report Abuse
Rajendra Bupathi எந்த முகத்தோட இப்படி எல்லாம் பேச ஒங்களுக்கு தோணுது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X