அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்திப்பு ஏன் ?

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (24)
Advertisement
முதல்வர், அமைச்சர்கள், சந்திப்பு ,

சென்னை: அதிமுகவில் இரு அணிகள் இணைய பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அடுத்தடுத்து அமைச்சர்கள் சந்தித்து வருவது ஏன் என்பது குறித்து பல யூகங்கள் கூறப்படுகின்றன.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதலில் செங்கோட்டையன், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் சந்தித்தனர். இந்த அமைச்சர்கள் இரு அணிகளும் இணைய பேச்சு நடத்தும் குழுவில் இடம் பெற்றவர்கள் ஆவர். ஆகையால் இந்த சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசுகையில் அவர்கள் கூறியதாவது :


யாரை முதல்வராக்குவது ?

4 அமைச்சர்கள் முதல்வரை சந்தித்ததில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. இந்த சந்திப்பில் இரு அணிகள் இணையும் போது , யாரை முதல்வராக்குவது ? யாரை பொது செயலாளராக்குவது ? யாருக்கு முக்கியத்தும் கொடுப்பது ? ஒரு வேளை தினகரன் கைது ஆனால் என்ன செய்வது ? கைது செய்யப்படாவிட்டால் தினகரை எந்த நிலையில் வைப்பது ? உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம்.எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை, கட்சியில் பெரிய பொறுப்பில் இல்லை. அவரும் மற்ற அமைச்சரை போல ஒரு மூத்த அமைச்சர் தான். ஆனால் அவர் வகிப்பது முதல்வர் பதவி என்பதால், முதல்வர் பதவியை விட்டு கொடுப்பாரா என்பது இந்த இணைப்பின் முக்கிய முடிவு. அதனால் இன்று 4 அமைச்சர்களும் சந்தித்துள்ளனர். தங்கமணியும், வேலுமணியும் தினகரனோடு காரசார விவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஆவர். தினகரனை நேரடியாக கட்சியில் இருந்து ஒதுங்கும்படி கேட்டு கொண்டவர்கள். இன்று முதல்வரை சந்தித்த பின் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசனும் நேராக அடையாறில் உள்ள தினகரனை சந்தித்தனர். முதல்வரிடம் பேசியதை அவரிடம் விவாதித்துள்ளனர். ஆனால் முதல்வரை சந்தித்த வேலுமணியோ, தங்க மணியோ தினகரனை போய் சந்திக்கவில்லை. நேற்று பரபரப்பான சூழலில் 25 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதும் தங்கமணி வீட்டில்தான்.இன்று காலை ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அமைச்சர்கள் , 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கரையில் இருக்கும் வேலுமணியும் , தங்கமணியும் தினகரனை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன், கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என இன்றைய முதல்வருடனான அமைச்சர்கள் சந்திப்பில், எடுத்துரைக்கப்பட்டிருக்கும் என்பதாகவே கருதப்படுகிறது. இவ்வாறு அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
18-ஏப்-201719:29:14 IST Report Abuse
Vasanth Saminathan வேறு எதற்கு இன்னும் நாலு வருஷத்துக்கு எப்படி பதவியை தக்கவைத்துக்கொண்டு கொள்ளை அடிப்பது என ஆலோசிக்கத்தான்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
18-ஏப்-201718:31:31 IST Report Abuse
balakrishnan இவங்க என்னமோ பண்ணட்டும், இப்ப தமிழகம் கேட்ப்பாரற்று கிடக்கும் நிலை, எல்லா முக்கிய பிரச்சனைகளும் கிடப்பில் கிடக்கிறது, இவங்க இணைஞ்சா மட்டும் என்ன நடக்கப்போகுது, தினகரன்/ சசி கூட்டம் சும்மா இருக்காது அவ்வளவு சீக்கிரம் இனைய விடமாட்டாங்க, தமிழகத்துக்கு போதாத காலம்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201717:24:50 IST Report Abuse
மலரின் மகள் ////இன்று காலை ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அமைச்சர்கள் , 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கரையில் இருக்கும் வேலுமணியும் , தங்கமணியும் தினகரனை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது//// கூவாத்தூரில் கடலில் விடுதியின் உணவகத்தில் படகு மூலம் உல்லாச பயணத்தில் எதோ முடிவுகள் எடுக்கப்பட்டது. இப்போது அதி பயங்கர பாதுகாப்புடன் போர்க்கப்பலில் கடலுக்குள்ளேயே சென்று எதோ செய்திருக்கிறார்கள். முடிவு அதி பயங்கர மாக இருக்குமோ, அடுத்து பிரமோஸ் ஏவுகணையை பயணம் செய்து முடிவுகள் எடுக்கும் நிலமை வரக்கூடாது. தாங்காது தமிழ் நாடு.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஏப்-201721:31:06 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ ஒன் வே டிக்கெட்டா இருக்கனும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X