அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் - இரட்டை இலை: எது முக்கியம்?

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (39)
Share
Advertisement
தினகரன் - இரட்டை இலை ; எது முக்கியம் ? Dinakaran,TTV Dinakaran,

சென்னை: அதிமுகவில், இரு அணிகள் இணையுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஓ.பி.எஸ்., இன்று பெரியகுளத்தில் அளித்த பேட்டிக்கு பின்னர் சசி. ஓ.பி.எஸ்., அணியினர் இணைவதில் சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு வரை அமைச்சர்கள் ஆலோசனை, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை என ஆளும் கட்சி அரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகள் இடையே பேச்சு நடத்த அமைச்சர்கள் கொண்ட 9 பேர் குழு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓ.பி.எஸ்., இன்று அளித்த பேட்டியில்; நிபந்தனையற்ற பேச்சு என்று நான் கூறியதை பத்திரிகைகள் தவறுவலாக திரித்து கூறியுள்ளன. எங்களின் கொள்கையில் மாற்றமில்லை. சசி குடும்பத்தினரை ஜெ., ஒதுக்கி வைத்திருந்தார். சசியை ஒரு உதவியாளராகத்தான் வைத்திருந்தார். அதிமுகவில் இருந்து சசி குடும்பம் வெளியேற வேண்டும். ஒரு கட்சி ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என பேசினார்.


இணையும் வாய்ப்பு குறைந்தது ;

இதனையடுத்து இரு அணிகள் பேச்சு என்ற பரபரப்பு பணால் ஆகிப்போனது. இரு அணிகள் இணையும் போது தினகரன் வெளியேற வேண்டும் என்ற வலியுறுத்தல் யூகமாக கூறப்பட்டது. தற்போது ஓபிஎஸ் பேட்டிக்கு பின் இது உறுதியாகி விட்டது. இரு அணிகள் இணைந்தாலே இரட்டை இலையை மீட்க முடியும். அதனால் தற்போது தினகரனா ? இரட்டை இலையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muga Kannadi - chennai,இந்தியா
18-ஏப்-201723:24:13 IST Report Abuse
Muga Kannadi பிஜேபி யின் ஆப்பு இன்னும் சரியாக வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இரட்டை இலை கிடைச்சா பிஜேபிக்கு இன்னும் difficult ஆகும் என்பது தெரியவில்லையா.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201721:44:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கமிஷன்.. மாட்டிக்காமே, எப்படி கெடைச்சாலும் சரி.. எந்த திண்ணைக்காரன் வந்தாலும் சரி, எந்த கொட்டை இலையா இருந்தாலும் சரி.. கமிஷன்.. மாட்டிக்காமே.. அவ்வளவு தான் மக்களே.
Rate this:
Cancel
hasan - Chennai,இந்தியா
18-ஏப்-201717:34:46 IST Report Abuse
hasan எல்லாம் இன்னும் 4 வருடத்தை ஓட்டனுமே (சம்பாதிக்க் வேண்டுமே) அதுக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X