அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநில அரசு செயல்படுகிறதா? ஸ்டாலின் சந்தேகம்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (8)
Advertisement
ஸ்டாலின், அமைச்சர்கள், நிர்வாகம்

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை முதல்வர் சந்திக்க மறுப்பது வேதனை. கட்சி சின்னத்திற்கு ரூ.60 கோடி பேரம் என்றவுடன் அனைவரும் கூடிபேசுகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்கட்சி பிரச்னையில் உறைந்து போயுள்ளனர். அரசியல் சட்டப்படி மாநில அரசு நிர்வாகம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. யார் பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் உள்ளனர். தமிழக நலன்கள் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அதிமுக அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது. அரசு நிர்வாகத்தை செயல்பட வைக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
18-ஏப்-201718:37:45 IST Report Abuse
balakrishnan நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து, பிரதமரை பார்க்க வந்து விட்டார்கள், அவரும் பார்க்கவில்லை, அவர் பார்ப்பது இருக்கட்டும், உச்ச நீதிமன்றம் தமிழக விவசாயிகள் பற்றிய விரிவான அறிக்கை கேட்டுள்ளது, இந்த சூழலில் நமது முதல்வர் சென்று அவர்களை பார்த்து பேசினால் ஒரு வேளை போராட்டம் முடிவுக்கு வரலாம், தமிழக அரசு இன்றைக்கு திரிசங்கு நிலையில் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
18-ஏப்-201717:07:20 IST Report Abuse
MANI DELHI தாங்கள் அப்பப்போது இருக்கிறேன் என்று வெளிக்காட்டும் நிலையில் உள்ளீர்கள். நிர்வாகத்திறமை பற்றி நீங்கள் இருவருமே பேசாதீர்கள். உங்களை நம்பி திமுகவிற்கு பலம் என்றால் அது உங்கள் அறியாமை. மக்கள் நன்கு யோசிக்க தொடங்கி விட்டார்கள். தேசியம் சார்ந்த வளர்ச்சியுடன் நிர்வாகம் கொடுக்கப்பட்டால் நீங்கள் கரை ஏறலாம். தமிழகத்திற்கு வளர்ச்சி தேவை உங்கள் காமெடி அரசியல் இல்லை. முதலில் அறிக்கை கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே விமர்சனங்களுக்குள்ளாக மாட்டிர்கள். மோடிஜி பிஜேபி நண்பர்களுக்கு கொடுத்த அட்வைஸ் உங்கள் கட்சிக்கும் தேவை. அமைதி காருங்கள். உங்களுக்க காலம் கனியும் போது நல்ல நிர்வாகம் கொடுப்பதை பற்றி பேசலாம். ஓகே
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
18-ஏப்-201718:41:50 IST Report Abuse
balakrishnanஅவ்வப்போது மட்டும் செய்திகளை படிக்காதீர்கள், இன்றைய சூழலில் ஒரு அமைச்சரை விட, பல மடங்கு சுறுசுறுப்புடன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து பொறுப்புடன் செயல் ஆற்றுகிறார், மற்ற எந்த அரசியல் தலைவர்களை விட ஸ்டாலின் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார், அறிக்கை மட்டும் விடுவதில்லை, பிரச்சனைகளை நேரடியாக சந்தித்து வருகிறார், மோடிக்கு, யோகி வந்ததில் இருந்து கொஞ்சம் பயம், அதற்கு யார் என்ன செய்ய முடியும்,...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
18-ஏப்-201716:19:36 IST Report Abuse
SENTHIL NATHAN அறிவு கொழுந்து தான் சுடலை சி எம் ஆக யார், எப்ப, இருப்பாங்க ங்கிறதே சந்தேகமாக இருக்கும் போது அரசாங்கம் செயல்பட வில்லை என்று " கை புண்ணுக்கு கண்ணாடி கொண்டு" பார்க்கிறீர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X