எம்.எல்.ஏ.,வின் நாடகம் அரசு அதிகாரியின் கை நீட்டம் போலீசின் ராஜ வாழ்க்கை| Dinamalar

எம்.எல்.ஏ.,வின் நாடகம் அரசு அதிகாரியின் கை நீட்டம் போலீசின் ராஜ வாழ்க்கை

Added : ஏப் 18, 2017 | |
பள்ளிகளில் தேர்வு முடிஞ்சு, மாணவர்களுக்கு கொண்டாட்டம்; பெற்றோருக்கு திண்டாட்டம்,'' என்று புலம்பியவாறு உள்ளே நுழைந்தாள் சித்ரா.""ஆமா. விடுமுறையில் குழந்தைகளை வெளியே அழைச்சிட்டு போகணும்; வீட்டுக்கு வரும் உறவினர்களை கவனிக்கணும்,'' என்று, கவலைகளை மித்ரா அடுக்கினாள்.""பல பள்ளிகளில், இப்பவே அட்மிஷன் முடிச்சுட்டாங்களாம். பாவம் பெற்றோர் நிலமை. அது சரி, சீமை கருவேல
எம்.எல்.ஏ.,வின் நாடகம்  அரசு அதிகாரியின் கை நீட்டம்  போலீசின் ராஜ வாழ்க்கை

பள்ளிகளில் தேர்வு முடிஞ்சு, மாணவர்களுக்கு கொண்டாட்டம்; பெற்றோருக்கு திண்டாட்டம்,'' என்று புலம்பியவாறு உள்ளே நுழைந்தாள் சித்ரா.
""ஆமா. விடுமுறையில் குழந்தைகளை வெளியே அழைச்சிட்டு போகணும்; வீட்டுக்கு வரும் உறவினர்களை கவனிக்கணும்,'' என்று, கவலைகளை மித்ரா அடுக்கினாள்.
""பல பள்ளிகளில், இப்பவே அட்மிஷன் முடிச்சுட்டாங்களாம். பாவம் பெற்றோர் நிலமை. அது சரி, சீமை கருவேல மரம் ஒழிப்பு பணி எப்படி நடக்குது,'' என்றாள் சித்ரா.
""வறட்சியை தவிர்க்க, அதை அகற்றி வர்றாங்க. ஆனா, வறட்சியால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை; அதன் எதிரொலியாக நடந்த போராட்டம் என அதிகாரிகள் கவனம் அந்த பக்கம் திரும்பினதால, இப்ப அந்த பணி மந்த கதியில் இருக்கு,'' என்றாள் மித்ரா.
""அது சரி, தண்ணீர் லாரி பிரச்னை எந்தளவு இருக்கு,'' என்று மித்ரா கேட்க, ""லாரி உரிமையாளர்களுக்குள்ளேயே நிறைய கருத்து வேறுபாடாம். விவசாய கிணறுகளில் இலவச மின் இணைப்புகளில் வர்த்தகத்துக்கு தண்ணீர் வாங்கிய லாரிகளால பிரச்னை பெரிசாயிடுச்சுன்னு, அவர்களுக்குள்ளே சலசலப்பு கிளம்பியிருச்சாம்,'' என்றாள் சித்ரா.
""இதெல்லாம், ஆய்வு செய்யாம, மின் வாரியத்தினர் என்ன செய்யறாங்க. விவசாய மின் இணைப்பு வாங்குற இடங்களில் நடக்கும் விவசாயமும், பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவும் கூட கணக்கிட்டு கண்காணிக்க முடியாத அளவுக்கு, மின் வாரியத்தினர் என்ன அவ்வளவு பிஸியாக இருக்காங்களோ,'' என்றாள் மித்ரா.
""கலெக்டர் ஆபீசில வேலை செய்யறவங்களுக்கு கூட மதிப்பில்லாம போச்சு,'' என்று "டாபிக்கை'
மாற்றினாள் சித்ரா.
""என்னாச்சு, ஏன் மதிப்பிலாம போச்சு?'' என்றாள் மித்ரா.
""கலெக்டர் ஆபீஸ் அலுவலர் ஒருத்தர், அவிநாசியில் நடக்கும், தமிழக அரசின் சாதனை விளக்க பிரசாரத்துக்கு போக, பைக்கில் போனார். அம்மாபாளையம் செக்போஸ்ட்டில், அவரை பிடிச்ச போலீஸ் ஒருத்தர், கண்டபடி பேசுனாராம். கலெக்டர் ஆபீஸ் ஸ்டாப், அப்படின்னு சொல்லியும்
கேட்கலையாம்,'' என்றாள் சித்ரா.
""அதாவது பரவாயில்லை. வருவாய்த்துறையை சேர்ந்த ஊழியர்கிட்டயே, "டெத் சர்டிபிகேட்' கொடுக்க, 400 ரூபா வாங்கியிருக்காங்க தெரியுமா?'' என்றாள் மித்ரா.
""அட, சாமி. இந்த கூத்து எங்க நடந்தது,'' என்றாள் சித்ரா ஆர்வமாக.
"" "ரிஜிஸ்டர்' ஆபீசில். வருவாய்த்துறை ஊழியர் ஒருத்தரு, சொந்தக்காரருக்கு, "டெத் சர்டிபிகேட்' கேட்டு விண்ணப்பிச்சிருக்காரு. ரெண்டு நாள் கழிச்சு வரச்சொல்லியிருக்காங்க. "சர்டிபிகேட்' ரெடியா வெச்சிருந்த, அந்த இரண்டெழுத்து அதிகாரி, "நானூறு வெட்டுங்க' ன்னு கறாரா கேட்டிருக்காரு. இதைக்கேட்டதும், அவருக்கு தேள் கொட்டின மாதிரிய ஆயிடுச்சாம். வேற வழியில்லாம, பணத்தை கொடுத்து, சர்டிபிகேட் வாங்குனாராம்,'' என்று மித்ரா கூறியதும், மொபைல்போன் சிணுங்கியது.
""ஹலோ, சொல்லுங்க ரவி அங்கிள், நல்லாயிருக்கீங்களா?'' என்று பல விஷயங்களை பேசினாள்.
""என்ன பண்றது? பத்திரப்பதிவு குறைந்ததால, பஞ்சத்துக்கு அடிபட்ட மாதிரி "டெத் சர்டிபிகேட்' கொடுக்கவும் காசு புடுங்கறாங்க,'' என்று வேதனைப்பட்டாள் சித்ரா.
""எம்.எல்.ஏ., உண்ணாவிரத டிராமா பத்தின நியூஸ் ஏதாச்சும் இருக்கா,'' என்றாள் மித்ரா.
""இருக்கே, மாவட்ட செயலாளர் கூட சண்டை; மாவட்ட அமைச்சர் கிட்டயும் ராசியில்லை. எவ்வளவு மிரட்டினாலும், அதிகாரிகளும் கண்டுக்கறதில்லை.
கூவத்தூர்ல இருந்தப்ப "சந்தோஷமா இருக்கோம்'னு பேட்டி கொடுத்ததால, மக்கள் கிட்டையும் நல்ல பேரு இல்லை. மாவட்ட செயலாளர் பதவியையும் பிடிக்க முடியலை.
""எல்லோரும் கண்டுக்காம விட்டதால், திடீர்ன்னு இப்படி "ஐடியா' பண்ணியிருக்காரு. உடனே, கலெக்டர் "மோர்' பாட்டிலோட போய், உண்ணாவிரத நாடகத்தை, முடிச்சு வெச்சாங்க.
ஆனா, மக்களை இனியும் ஏமாத்த முடியாதுங்கிறது, எம்.எல்.ஏ.,வுக்கு தெரியல,'' என்றாள் சித்ரா.
""சிட்டி போலீஸ் ஸ்டேஷன்களில், மூணு வருஷம் கடந்தும், பலர் இடமாற்றம் செய்யப்படாம, ஒரே ஸ்டேஷனில் "ராஜவாழ்க்கை' நடத்திட்டு இருக்காங்களாம்,'' என்று மித்ரா போலீஸ்
சப்ஜெட்டுக்கு மாறினாள்.
""ஓ... எதனால இடமாற்றம் பண்ணலையாம்,'' என்று சித்ரா கேட்டாள்.
""ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறை இருக்குல்ல. அதை சாதகமா பயன்படுத்தி, பெஞ்சு தேய உட்கார்ந்திட்டாங்க. சிலர் நல்லா "கல்லா' கட்டிவர்றாங்க. இதை சொல்ல வேண்டிய ஐ.எஸ்., போலீசும், நல்ல தூக்கத்தில் இருக்கு,'' என்று மித்ரா சொன்னாள்.
""அட, இவ்ளோ கூத்து நடக்குதா,'' என்ற சித்ரா ஆச்சரியப்பட்டாள்.
""அது மட்டுமா, சிட்டியில் ரெண்டு இன்ஸ்பெக்டருங்க, வேறு மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் ஆயிட்டாங்க. அந்த இடத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செஞ்சுட்டு, "தலையாட்டி பொம்மைகளை' சட்டம் ஒழுங்கில் இருந்து மாத்தவேயில்லையாம்,'' என்றாள் மித்ரா.
""ஓ.கே.,ப்பா. வெயில் உச்சியில் ஏறதுக்கு முன்னாடி, நா கௌம்பறேன்,'' என்றவாறு, சித்ரா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X