பொது செய்தி

இந்தியா

சராசரி மழை: வானிலை மையம் ஆறுதல்

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (6)
Share
Advertisement
சராசரி மழை, இந்திய வானிலை மையம்

புதுடில்லி: இந்த வருடம் நாடு முழுவதும் சராசரி மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது, விவசாயிகளுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது.
பொதுவாக 96 முதல் 104 சதவீதம் வரை மழை பதிவாகும் போது சராசரி மழை பதிவாக கருதப்படும். அதற்கு கீழ் மழை பதிவாகும்போது சராசரிக்கு கீழ் எனவும், 104-110 சதவீதம் பதிவாகும் போது சராசரிக்கு மேல் எனன கருதப்படும்.
கடந்த வருடம் நாடு முழுவதும் சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியது. ஆனால் சராசரி மழை மட்டுமே பதிவானது. அதே நேரத்தில், தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் குறைந்தளவே மழை பதிவானது. இதனால்அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் ரமேஷ் கூறுகையில், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சராசரி அளவு பதிவாகும். நாடு முழுவதும் பரவலாக மழை இருக்கும். 96 சதவீதம் வரை நாடு முழுதும் மழை பதிவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201719:47:52 IST Report Abuse
K.Sugavanam போராடும்விவசாயிகளை அரசு காப்பாற்றுமா?இதன் அறிகுறிகள் தெரிகிறதா?IMD இதை சொன்னால் நல்லது.
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
18-ஏப்-201719:33:36 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) // கடந்த வருடம் நாடு முழுவதும் சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியது. ஆனால் சராசரி மழை மட்டுமே பதிவானது. அதே நேரத்தில், தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் குறைந்தளவே மழை பதிவானது. இதனால்அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. // - இதே தான் இந்த ஆண்டும் ஏற்படும். எந்த அளவிற்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை எரிக்கிறோமோ, அந்த அளவிற்கு புவியின் வெப்பம் மேலும் மேலும் அதிகரித்து, வருங்காலத்தில் அதிக பாதிப்பை உண்டாக்கும். எல்லோராலும் மின்சார வாகனங்களை வாங்க முடியாது. ஆனால் எல்லோராலும் மின்சார அடுப்புகளை வாங்க முடியும். வெறுமனே கருத்துக்களை லைக் செய்வதை விட, அதை பின்பற்றிடுங்கள். உங்கள் வீட்டில் முடிந்தால் மின்சார அடுப்பு வாங்குங்கள். வருங்காலத்தை நினைத்து பாருங்கள்.
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஏப்-201719:02:43 IST Report Abuse
Pasupathi Subbian தானை தலைவர், தியாகி, எம் நாட்டின் அரசர் தினகரன் அவர்கள் என்றைக்கு முதல்வரின் அரியாசனத்தில் உட்கருக்கிறாரோ அன்றுதான் தமிழகத்துக்கே விமோசனம். மக்களின் நலனுக்கு இரவும் பகலும் பாடுபடும் ஒரே தலைவர் அவர் மட்டுமே. ஆகவே மக்களே தினகரனை ஆதரிப்பீர் ( இதுக்கு மேல மூச்ச பிடிச்சிகிட்டு கத்தினாலும் ஒரு பய திரும்பமாட்டேனுங்கறாங்க )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X