அரசியல் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் பா.ஜ.,வினர் மறியல்:நூற்றுக்கணக்கானோர் கைது

Added : ஏப் 18, 2017
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ., வினரை போலீசார் கைது செய்தனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடையை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் படி, மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அதே சமயம், பொது இடங்களில் இருக்கும் மதுக்கடையையும் மூட வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று மாவட்டம் முழுவதும் பா.ஜ.,வினர் மறியல் நடத்தி கைதாகினர்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியில், பா.ஜ., வினர் கடையை முற்றுகையிட்டு, சாலையை மறியலில் ஈடுபட்டனர். நகர தலைவர் ராஜேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக 40 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமைவகித்தார். டாஸ்மாக மதுபானக்கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தனியார் பாரை மூடவலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்துநிறுத்தி போலீசார் கைது செய்தனர். பழநி பாப்பம்பட்டியில் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நெய்க்காரப் பட்டியில் பேரூர் தலைவர் பாலுச்சாமி, பாலசமுத்திரத்தில் கிளைத்தலைவர் ரகுபதி உட்பட 106பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைரோடு: கொடைரோட்டில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் ராஜா, அழகர்சாமி, ரத்தினசாமி பங்கேற்றனர்.
ரெட்டியார்சத்திரம்: இங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீரப்பன், சிவசுப்ரமணி, ஸ்டாலின், வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர். சாணார்பட்டி: பஸ்ஸ்டாப் அருகே ஒன்றிய பா.ஜ., சார்பில் ஆர்பாட்டம் செய்தனர். பின், டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். ஒன்றியத் தலைவர் சுரேஷ், செயலாளர்கள் தனபாலன், கார்த்திகைசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் விஜயராமன், ராணுவ பிரிவு தலைவர் கணேசன் உட்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை: வடமதுரை ஒன்றிய பா.ஜ.க.,வினர் காணப்பாடி 'டாஸ்மாக்' மதுக்கடையை முற்றுகையிட சென்றனர். மாவட்ட துணைத்தலைவர் சுந்தர்ராஜன், ஒன்றிய தலைவர் கே.ராமசாமி, நகர தலைவர் சண்முகம், மாவட்ட பொது குழு உறுப்பினர் வி.கே.ராமசாமி உள்பட 18 பேரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X