பதிவு செய்த நாள் :
அறை எண் 263ல் தினகரனின் லஞ்ச பணம்

இரட்டை இலைச் சின்னத்தை எப்படியாவது பெற்றுவிடும் நோக்கில், அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரனுக்கு, தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தர், கைது செய்யப்பட்டான்.

 அறை எண், 263, தினகரன், லஞ்ச, பணம்


இந்த சம்பவம், தமிழக அரசியலில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசாரின், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையில் கூறப்
பட்டுள்ளதாவது:
இம்மாதம், 15ல், எங்களது அலுவலகத்துக்கு, நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து, சுகேஷ் சந்தர் என்பவன், டில்லி ஆர்.கே.புரம் பகுதியில் அமைந்துள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் தங்கியிருப்பது குறித்த தகவல் வந்தது.
சசிகலா அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தரும் நோக்கில், அந்த அணியைச் சேர்ந்த தினகரனுடன், இவன், தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தான்.

இரட்டை இலை:


இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக, தினகரனுக்கு வாக்குறுதி அளித்து, அதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்ச பேரத் திற்கு, இவன் உடன பட்டி ருப்பதும் தெரியவந்தது. இதை யடுத்து, 17ம் தேதி அதிகாலை, 10 போலீஸ் அதிகாரிகள் சென்றோம். லேப்டாப், பிரின்டர் உட்பட சோதனைக்கு தேவை யான அனைத்து பொருட் களுடன், நான்கு வாகனங்களில் சென்றோம்.
அங்கு, கேட் நம்பர் 1 வழியாக சென்று, வரவேற் பறையில் இருந்தவர்களிடம், எங்களை பற்றிய விபரங்களை தெரிவித்தோம்; பின், ஓட்டல் ஊழியர் கள் சிலருடன், அறை எண். 263க்கு சென்றோம். மூடப்பட்டிருந்த கதவு திறந்ததும், அங்கிருந்தவன், தன்னை சுகேஷ் என அறிமுகப்படுத்தினான். சோதனை நடத்த வந்த விபரத்தை, தெரிவித்தோம்.

உள்ளே சென்று, முழுவதுமாக விசாரித்தபோது, அவன், பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் என்ற சுகேஷ் சந்தர் என்பது தெரியவந்தது.மேலும் விசாரித்த போது, ஹவாலா பணப் பரிமாற்றம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் தனக்கு தொடர்பில்லை என மறுத்தான். தீவிரமாக விசாரித்தும் கூட, தன்னிடம் எந்த பணமும் இல்லை என சாதித்தான். அதன்பின், அந்த அறை முழுவதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது, ஒரு பெரிய பேக் தென்பட்டது; அதை திறந்து பார்த்தோம்.

பதில் வரவில்லை


அதில், கட்டுக்கட்டாக புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

அதை எண்ணி பார்த்தபோது, 1.30 கோடி ரூபாய் இருந்தது. இந்தபணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு சுகேஷிடம் இருந்து உருப் படியான பதில் வரவில்லை. இதை அடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு போன் மூலமாக, இந்த பணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின், சாணக்கியபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, மேற்கொண்டு விசாரணைக் காக, சுகேஷை அழைத்துச் சென்றோம். அங்கு நடந்த விசாரணையில், அவன், பல விபரங் களை தெரிவித்தான்.

தேர்தல் கமிஷனில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக, அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் பொறுப் பில் உள்ள தினகரனுடன் சேர்ந்து, சுகேஷ் சந்தர் கூட்டுச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S PANDIYAN - PARIS,பிரான்ஸ்
19-ஏப்-201718:40:40 IST Report Abuse

S PANDIYAN2000 ருபாய் நோட்டு வெளியிட்டது திருடர்களுக்கு எவ்வளவு சுலபமாக இருக்கு பார்த்தீர்களா. அறிவில்லாத அரசியல் தலைவர்களால் தான் ஊழல் உருவாவுகிறது. 1.30 கோடியை சிறிய பெட்டியில் அடைத்து வைக்க உதவிய பிரதமர் மோடியை இந்த நாட்டு மக்கள் என்ன செய்ய போகிறது. காத்திருந்து பார்ப்போம்.

Rate this:
TechT - Bangalore,இந்தியா
19-ஏப்-201722:34:19 IST Report Abuse

TechT"\\தேர்தல் கமிஷனில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக, அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் பொறுப்பில் உள்ள தினகரனுடன் சேர்ந்து, சுகேஷ் சந்தர் கூட்டுச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது\\" அப்படியானால் தேர்தல் கமிஷனில் சுகேஷ் ஆட்கள் உண்டுதானே ??? ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஏப்-201717:26:46 IST Report Abuse

Endrum Indianகோர்ட்டில் இப்பொழுது கேள்வி, இது தினகரன் பணம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்??? கேட்க வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் உண்மையின் கழூத்தை திருகலாம் இந்த கோர்ட்???

Rate this:
JeevaKiran - COONOOR,இந்தியா
19-ஏப்-201716:38:51 IST Report Abuse

JeevaKiranதேர்தல் கமிஷனில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அதெப்படி இந்த பொடியனுக்கு அத்தனை செல்வாக்கு அங்கே. முதலில் நாடு முழுவதும் இந்த மாதிரி செல்வாக்கை கூண்டோடு ஒழிக்கணும். அதற்கு முதல் படி போலீசார்தான். எவனாவது ஒரு குற்றவாளியை கஷ்டப்பட்டு போலீசார் பிடித்துக்கொண்டு வந்தால், பின்னாலேயே ஒரு அரசியல் அல்லக்கை வந்து, அல்லது போன் மூலம் இது நம்மாள்தான் விட்டுவிடு என்பான். பின் போலீசார் பேச்சு மூச்சு இல்லாமல் அந்த குற்றவாளியை விட்டு விடுவார்கள். பிறகு நாடு எப்படி உருப்படும். போலீசார் பிடிக்கும் குற்றவாளிக்கு எவனாவது வக்காலத்து வாங்கினால் அவனையும் பிடித்து உள்ளே போடுங்கள். பிறகு பாருங்கள் நாட்டில் குற்றங்கள் எப்படி குறைகிறதென்று.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X