அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் 'மிஸ்சிங்'
அரண்டு கிடக்கும் ஆளுங்கட்சியினர்

கோவை: அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளால், இந்தாண்டு தமிழக பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தை நடத்தவே ஆளும் கட்சியினர் தயாரில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் ,விளக்க, பொதுக்கூட்டம், 'மிஸ்சிங்', அரண்டு, கிடக்கும், ஆளுங்கட்சியினர்

ஒவ்வொரு ஆண்டும், சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின், ஆளும் கட்சியினர் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப் படுவது வழக்கம். அதில், பட்ஜெட் விபரங்கள் குறித்து, கட்சித் தலைமையால் அறிவிக்கப் படும் பேச்சாளர்கள் பேசுவர்.

பெருமளவு அரசியல் பேசினாலும், பெயரளவுக்காவது பட்ஜெட் குறித்து இக்கூட்டத்தில் பேச்சு இருக்கும்.

ஆனால், இந்தாண்டு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முடிந்து,நாட்கள் பல கடந்து விட்ட நிலை யில், இதுவரை பட் ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங் கள் நடத்தப்பட வில்லை; அது தொடர்பான அறிவிப்பும், மாவட்ட செயலர்களுக்கு வரவில்லை.

சசிகலா அணி ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, வருமான வரித் துறை ரெய்டு, சின்னத்தை கைப்பற்ற லஞ்சம் கொடுத்ததாககூறப்பட்ட விவகாரம் என, கட்சியை நடத்தும் தினகரன் பல நெருக்கடிகளில் சிக்கியுள் ளார்.
கட்சி துணை பொதுச்செயலர் என்ற முறையில், அவரால் கட்சி நடைமுறைகளை சரிவர செயல்படுத்த முடியவில்லை;

Advertisement

கட்சியை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறி வருகிறார். பட்ஜெட்விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், நடத்தவே யாரும் தயாரில்லை.
மக்கள் மத்தியில் தினகரன் தரப்புக்கு அதிருப்தி அதிகரித்து வருவதும், கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் வராது என்ற அச்சமும் தான் இதற்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-ஏப்-201718:23:11 IST Report Abuse

ezhumalaiyaanதமிழக அரசு நிர்வாக யந்திரம் முழுவதுமாகஇரண்டு மாதங்களாக முடக்கம் (குறிப்பாக கூவத்தூர் கேம்பிற்கு பின்னர் )

Rate this:
sundar raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-201712:42:24 IST Report Abuse

sundar rajaதிராவிடர்கள் திருடர்கள் என்று சொல்லுவது அறிவின்மை. வாய்ப்பு கிடைத்தால் எல்லாரும் திருடர்கள் தான். மத்திய பிரதேசிலே நடந்த திருட்டு தனம் உங்களுக்கு தெரிய வில்லையா. எடியூரப்பா வின் ஊழல் தெரியாதா. வாஜ்பாய் காலத்தில் நடந்த டெலிபோன் ஊழல் தெரியாதா. அதை பார்த்து தானே கலைஞர் பின்பு டெலிபோன் துறை வேண்டும் என்று வாங்கினார். கொஞ்சம் அறிவை பயன் படுத்துங்கள்.

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
19-ஏப்-201712:07:22 IST Report Abuse

kc.ravindran"""ஆனால், இந்தாண்டு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முடிந்து, நாட்கள் பல கடந்து விட்ட நிலையில், இதுவரை பட் ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வில்லை"""" ஏன்யா அவசரப்படறே. 89 கோடீனா சும்மாவா. அதை முதல்ல விளக்கீட்டு வரோம் அப்புறந்தான் மத்ததெல்லாம். நீ மட்டும் வந்தா என்னவாம் கிழிச்சிடுவியா. ஜனங்களே கேட்கல பத்திரிக்கை ஜனங்க கேட்கல என்னமோ உனக்கு மட்டும் பொத்துக்குதா அடக்கி வாசி நாங்க திரும்பி வருவோம்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X