ஹிந்தியில் பேசுங்க!

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (16)
Advertisement
ஹிந்தியில் பேசுங்க!

நாட்டு மக்கள், தங்கள் தாய் மொழியோடு, தேசிய மொழியான ஹிந்தியையும் அதிகம் பயன்படுத்த வேண்டும். அரசு செயல் திட்டங்களில், ஹிந்தி மொழியின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் முன்னேற்றம் கருதி, ஹிந்தி மொழி பயன்பாடு, மேலும் அதிகரிக்க வேண்டும்.

வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர், பா.ஜ.,

அரசும் மரணிக்கும்!

மஹாராஷ்டிராவில், வறட்சி காரணமாக, விவசாயிகள் தினந்தினம் செத்து மடிகின்றனர். இது குறித்து சிறிதும் கவலைப்படாத, மாநில அரசு, வறுமையால் விவசாயிகள் உயிரிழப்பதை, இயற்கை மரணம் என்கிறது. இதே நிலை தொடர்ந்தால், நிச்சயம் ஒரு நாள், பா.ஜ.,
அரசும் இயற்கையாகவே மரணிக்கும்.

உத்தவ் தாக்கரே,தலைவர், சிவசேனா

பொய் பிரசாரம்!

மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் நலனுக்காக, மத்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களின் கீழ், முஸ்லிம்கள் அதிகம் பயன் அடைந்து உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக, தேவையற்ற பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.

முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
19-ஏப்-201711:35:35 IST Report Abuse
A shanmugam முதலே நீங்க தமிழ் பேசுங்க பின்பு நாங்க ஹிந்தி பேசறோம்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-ஏப்-201713:33:05 IST Report Abuse
Agni Shivaமுதலில் நீ தெலுங்கு படி பிறகு அவர் தமிழ் படிப்பார்....
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-ஏப்-201709:45:11 IST Report Abuse
Agni Shiva தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு எது வேண்டும் என்று நன்றாக தெரிந்தவர். வெங்கையா நாய்டு ஆந்திரப்பிரதேஷில் பிறந்த தெலுங்கர். ஆனால் தெலுங்கை மட்டுமே படியுங்க அது மட்டுமே நமக்கு சோறு போடும் என்று சொல்லி தெலுங்கு வெறியை ஊட்டாதவர். ஒரு தெலுங்கு மொழி வெறியனாக மாறாமல், ஹிந்தியை படிக்க சொல்கிறார். ஆங்கிலத்தோடு ஹிந்தியையம் படித்து மத்திய அரசின் அதிகாரமையங்களை கைப்பற்றுவோம் என்பது தான் தமிழ்நாட்டை தவிர்த்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் நிலைமை. ஆனால் இங்கோ...தமிழ்நாட்டை நினைத்தாலே...
Rate this:
Share this comment
Cancel
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
19-ஏப்-201709:36:59 IST Report Abuse
Kalai Aarashan आपका नाम क्या है
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X