பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே புகார்:
மருந்து விலை ஆணைய குளறுபடி

மதுரை: இருதய, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க பயன்படும் 'ஸ்டென்ட்' போன்ற வற்றின் விலையை நிர்ணயிக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், 'தொலைபேசி புகார் எண்ணில் (1800 111 255) இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே புகார் செய்ய முடியும்' என கூறியுள்ளது. இது இந்தி பேசாத மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தி, ஆங்கிலம், புகார், மருந்து, விலை ,ஆணையம், குளறுபடி


மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்றல், மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்னை களுக்கு தீர்வு காண 1995ல் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.நாடு முழுவதும் விற்கப்படும் மருந்துகளுக்கான விலையை ஆணையமே நிர்ணயம் செய்கிறது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.

விலை நிர்ணயம்


இந்நிலையில், இருதய மற்றும் ரத்தக் குழாய்களின் அடைப்பினை நீக்க பயன்படும் 'ஸ்டென்ட்', அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'ஸ்டென்ட்' களின் அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, 'ஸ்டென்ட்' விலை 85 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. இதனால் 2 லட்ச ரூபாய் வரை விற்கப்பட்ட மருந்து தடவப்பட்ட 'ஸ்டென்ட்'களின் அதிகபட்ச விலை 29,600 ரூபாயாகவும், 80 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட உலோக 'ஸ்டென்ட்' களின் அதிகபட்ச விலை 7,260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

'இதனால், ஒவ்வொரு ஆண்டும், நோயாளிகள் 'ஸ்டென்ட்' வாங்க செலவிடும் பணத்தில், 4,450 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும்' என மத்திய அரசு கூறியது.

தமிழகம் 'பூஜ்ஜியம்'


அரசின் முடிவால், அதுவரை 650 சதவீதம் அளவுக்கு அதிக விலை நிர்ணயித்து 'ஸ்டென்ட்' விற்பனை செய்து வந்த தனியார் மருத்துவமனைகள் அதிர்ச்சியடைந்தன. வேறு வழியின்றி 'ஸ்டென்ட்' விலையை குறைத்த சில தனியார் மருத்துவமனைகள், அதை ஈடுகட்ட 'ஆஞ்சியோ' போன்ற சிகிச்சைக் கான செலவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், 'ஸ்டென்ட்' விலையை குறைத்ததன் பலனை நோயாளிகள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளின் முறைகேடு குறித்து பெறப்படும் புகார்களுக்கு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நோயாளிகளுக்கு வழங்கிய ரசீதில் 'ஸ்டென்ட்' விலை, வகை, காலா வதியாகும் தேதி, தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்களை குறிப்பிடாமல், அதை அதிக விலைக்கு விற்ற 40 மருத்துவமனைகள் மீதான புகார்கள் கடந்த மாதம் ஆணையத்தால் பெறப்பட்டன.

ஆனால்,அவற்றில் பெரும்பாலான புகார்கள் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவை. ஓரிரு புகார்கள் மட்டுமே கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தனியார் மருத்துவமனை கள் அதிக விலைக்கு 'ஸ்டென்ட்' விற்றாலும் ,

Advertisement

இது குறித்து ஒருவர் கூட ஆணையத்தில் புகார் அளிக்கவில்லை. இதற்கு புகார் அளிக்கும் முறையில் உள்ள குளறுபடிகளே காரணம்.

மேம்படுத்த எதிர்பார்ப்பு


புகார்களை தெரிவிக்க ஆணையம் வெளியிட் டுள்ள தொலைபேசி புகார் எண்ணில்இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே புகார் அளிக்கும் வசதி உள்ளது. வட மாநில மக்கள் மட்டுமே புகார் செய்யமுடியும் என்ற நிலை உள்ளது. புகார் கடிதம் மூலமோ, இணையதளம் (ஆங்கிலத்தில்) மூலமோ ஆணையத்திடம் புகார் செய்யும் வசதிகள் இருந்தாலும், தொலைபேசி புகார் எண் மூலம் புகார் அளிப்பது எளிதாக உள்ளதால் அதனையே மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால், மொழிப் பிரச்னை காரணமாக, பொது மக்கள் புகார் அளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதை தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள சில தனியார் மருத்துவ மனைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கட்டண கொள்ளை நடத்துகின்றன. 'அனைத்து மாநில மொழிகளிலும் புகார் அளிக்கும் படியாக, தொலைபேசி புகார் எண் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,ஆஸ்திரேலியா
19-ஏப்-201710:36:02 IST Report Abuse

manivannanஇந்த ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையில் நான் இங்கேயிருந்து விசாரித்த வகையில் சென்னை, மணிப்பால், பெங்களூர், இடங்களில் என்று ஒவ்வொரு ஊரிலும் சிகிச்சை செலவுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.. ஒன்றரை லக்ஷத்திலிருந்து நாலு லக்ஷம் வரையில் (2012ல்)சார்ஜ் செய்கிறார்கள்.. ஒரே சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு வித்தியாசம் என்று மேலும் விசாரித்த பொழுது தான் , தெரிந்தது. ஸ்டெண்டுகளில் நோயின் தனமைக்கு ஏற்ப QUALITY SIZE, PATIENTS AGE, OTHER CONCERNS, என்று எவ்வளவோ இருக்கிறது... அதற்கேற்ப சிகிச்சையின் செலவும் மாறுபடுகிறது...

Rate this:
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
19-ஏப்-201709:53:05 IST Report Abuse

Kalai Aarashanநோய் வராம பாத்துக்கோ,

Rate this:
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
19-ஏப்-201717:42:03 IST Report Abuse

Mohan Sundarrajaraoவந்துவிட்டால், உடனே கூட்டிப்போக இறைவனை வேண்டிக்கொள். ...

Rate this:
Peter Kulandai Raj - Bangalore,இந்தியா
19-ஏப்-201719:55:47 IST Report Abuse

Peter Kulandai Rajநன்று ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201709:03:08 IST Report Abuse

Srinivasan Kannaiyaமோடி வர வர ஜாதி வெறியர் ஆக ஆகிவருகிறார்...நல்லது இல்லை...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஏப்-201709:53:06 IST Report Abuse

Nallavan Nallavanமொழி வெறியரா, ஜாதி வெறியரா ???? ...

Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
19-ஏப்-201710:11:21 IST Report Abuse

Krishnamoorthi A Nமருத்துவ உபகரணங்கள் விலை குறைப்பு பற்றிய செய்திக்கு மோடியின் ஜாதி வெறி பற்றிய சம்பந்தமில்லாத கருத்து தேவைதானா? ...

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
19-ஏப்-201721:45:41 IST Report Abuse

Mahendran TCமோடிக்கு தமிழனை கண்டாலே வெறிதான் .... ...

Rate this:
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201700:05:42 IST Report Abuse

Rathinasami Kittapaஇவருக்குத் தனி வெரி எதற்கெடுத்தாலும் காரணம் மோடி இப்படித்தான் சிலர் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள் ...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X