அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (6)
Advertisement
அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?

சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர். அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக்குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிமேலும் சசிகலா குடும்பத்தின் பின்னால் சென்றால், அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதை உணரத் துவங்கினர். அதன் பிறகே, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் வெளியேற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

'நிபந்தனையை கைவிட மாட்டோம்!' : பெரியகுளத்தில், நேற்று பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
எம்.ஜி.ஆர்.,- - ஜெ., ஆகியோர், குடும்ப அரசியலை ஒருபோதும் ஏற்றதில்லை. தன் அண்ணன் அரசியலுக்கு வருவதை கூட, எம்.ஜி.ஆர்., விரும்பவில்லை. 2011ல் சசிகலாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். நான்கு மாதத்திற்கு பின், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சியில் சேர்ந்தார். ஜெ., இறக்கும் வரை, நீக்கப்பட்ட சசி குடும்பத்தினரை, கட்சியில் உறுப்பினராக்கவில்லை. கட்சி பொதுச்செயலரை, தொண்டர்கள், நிர்வாகிகள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, நியமன முறையில், சசிகலா, பொதுச்செயலரானது செல்லாது. அவரால் நியமிக்கபட்ட துணைப் பொதுச்செயலர், தினகரன் நியமனமும் செல்லாது. சசிகலா குடும்பம் இல்லாமல், எம்.ஜி.ஆர்., -- ஜெ., கொள்கைக்கு உடன்பட்டு பேச்சு நடத்தினால், இணைவதற்கு தயாராக உள்ளோம். கட்சியில் இணைந்தாலும், நாங்கள் முன்பே தெரிவித்தது போல, ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள், மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொண்டு வர வேண்டும். தேர்தல் கமிஷனில், குறுக்கு வழியில் சின்னத்தை பெற, புரோக்கர் மூலம் தினகரன் பணம் கொடுத்துள்ளதை, மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

3 மாதங்களுக்கு முன் ஒலித்த முதல் குரல்! : சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு குரல் எழுப்பிய, 90வது நாளில், அவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படுவதாக, அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். ஜெ., மறைவுக்கு பின், ஜன., 18ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். ஜெ., மறைவில் உள்ள சந்தேகம் தீர, நீதி விசாரணை நடத்த வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தார். அவர் எதிர்ப்பு குரல் கொடுத்து, நேற்றுடன், 90 நாட்கள் நிறைவு பெற்றது. நேற்றைய தினம், சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்.

விரைவில் பொதுக்குழு! : அறிவித்தபடி, சசிகலா, தினகரனை, கட்சியில் இருந்து நீக்கவும், புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யவும், அ.தி.மு.க., பொதுக்குழு, விரைவில் கூட்டப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி வீட்டில், நேற்றிரவு நடந்த ஆலோசனையில், இந்த முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது. இரு அணிகள் இணைப்புக்கு பின், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
19-ஏப்-201715:28:50 IST Report Abuse
GUNAVENDHAN சசிகலா குடும்பத்தினரின் பிடியில் இருந்து விலகுவதாக அறிவித்தால் போதும், அதன்பிறகு தொண்டர்கள் , மக்கள் ஆதரவு அரசுக்கு கூடும். இத்தனை குழப்பத்திற்கும் மூல காரணமே பன்னீரும், மதுசூதனனும் தான், அவர்கள் தான் தொடர்ந்து சசிகலாவை மூன்று நாள் சந்தித்து தாங்கள் தான் கட்சியை வழி நடத்தவேண்டும், உங்களை விட்டால் எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என்று சசிகலாவின் கைகளை பிடித்துக்கொண்டு அன்று கெஞ்சியது மதுசூதனன் தான், அதெல்லாம் நினைவில்லாதவர்கள் பதிவு செயது வைத்திருந்தால் பழைய ஊடக செயதிகளை பாருங்கள் , இந்த பெரிய மனுஷங்களால் தான் இத்தனை அவப்பெயரும் கட்சிக்கு ஏற்பட்டது என்று தெளிவாக தெரியும் . எனவே இத்தனை குழப்பத்துக்கு மூல காரணமான , முதுகெலும்பில்லாத இந்த குழப்பவாதிகளை, சுயநல வாதிகளை சமரச பேச்சுக்கெல்லாம் அழைக்கவே தேவையில்லை . சசிகலா குடும்பத்தினரின் பிடியில் இருந்து கட்சி விடுபட்டால் அதன் பிறகு பன்னீர் அணியினர் எதை சொல்லி கட்சி நடத்தப்போகிறார்கள், தானாக ஓடி வருவார்கள் . சமரசம் பேச கூப்பிட்டால் , எனக்கு இந்த பதவியை கொடு, என்னுடன் இருந்தவருக்கு அந்த பதவியை கொடு என்று பிகு பிடிப்பார்கள் , பதவிக்காகத்தானே தனியே போனார்கள் , எனவே அவர்களாக திரும்பட்டும் என்று விட்டு விடவேண்டும் . கட்சியை ஜெயலலிதா காட்டிய பாதையில், அதாவது மக்கள் நலனே முக்கியம் என்று செயல்படவேண்டும், மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாக தெரிந்தால் எதிர்த்து துணிவுடன் நிற்க வேண்டும், பன்னீரை விட்டால் பாஜகவினரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடப்பார் . தமிழக மக்களை பற்றியெல்லாம் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் எவ்வித கவலையும் இருக்காது, தனக்கு மீண்டும் பதவி கிடைக்க செய்த பாஜகவுக்கு தான் கைத்தடியாக செயல்படுவார் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஏப்-201710:29:17 IST Report Abuse
Malick Raja ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு தொக்கு .. என்பது போல அதிமுக இரண்டானது தீண்டத்தகாத சக்திகளுக்க சாதகமாக ஆக வழியேற்பட வாய்ப்பு என்று கருத தமிழகத்தில் பலிக்காது. முயற்சிகளுக்கு வேணுமானால் சாதகமாக இருக்கும் நிஜக்கதைக்கு சென்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்ட கதையாகிவிடும்.. தமிழகம் தமிழர்கள் என்ற ஒரே இனம் என்பது மேலும் உறுதியாகலாமே தவிர உதிர்க்க நினைபவர்களின் உதிரத்தை இழக்க வேண்டிய நிலை வரலாம்.. நல்ல மரத்தில் புல்லுருவிகளாக சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துகொண்டு ஏதோ தமிழகம் பூராவும் எழுச்சி என்று விளம்பரம் மூலம் பயனடைய முயலலாம் ஆனால் இங்கு தமிழன் என்கிற ஒருமைப்பாடு ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தில் ஆழமான நிலையில் இருப்பதால் அபிஷ்டு ஜடங்களுக்கு அழிவு தான்
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-ஏப்-201713:17:35 IST Report Abuse
Agni Shivaசாத்தான் வேதம் ஓடுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Raj Eas - dindigul,இந்தியா
19-ஏப்-201710:27:17 IST Report Abuse
Raj Eas அய்யா உங்க சொந்த பிரச்சனைக்கு ஒண்ணா சேர்ந்து முடிவு எடுத்தீங்களே டெல்லில விவசாயி 40 நாளா போராடுறானே அதுக்கு ஒன்னு கூட மாட்டிங்கறிங்களே கொடுமை டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X