அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு நாடகம் என்கிறார் பொன்.ராதா

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (24)
Advertisement
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு நாடகம் என்கிறார் பொன்.ராதா

நாகர்கோவில்: -''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு செய்தி, திட்டமிட்ட நாடகமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,'' என, மத்திய கப்பல் துறை இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைய போவதாக வெளியாகியுள்ள செய்திகள், திட்டமிடப்பட்ட நாடகம் அரங்கேறி கொண்டிருப்பதையே காட்டுகிறது. என்ன காரணத்துக்காக, இவர்கள் பிரிந்தனர்; இப்போது, என்ன காரணத்துக்காக இணைகின்றனர். இந்த ஆட்சியில், எல்லாருமே தவறு செய்தவர்கள் தான். ஜெ., மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள், இன்னும் அப்படியே இருக்கின்றன. இது தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இனி இணைந்தால், கண்துடைப்பு விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா என, தெரியவில்லை. அண்ணன், தம்பி சண்டை என்கின்றனர். சொத்துக்காகத் தான், அண்ணன், தம்பி சண்டை போடுவர். அ.தி.மு.க.,வை உடைத்து, கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம், பா.ஜ.,வுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இரட்டை இலை; எச்சில் இலை : பொன்.ராதாகிருஷ்ணனிடம், 'இரட்டை இலையை மீட்கவே, இரு அணிகளும் இணைவதாக கருதுகிறீர்களா' என கேட்டதற்கு, ''அவர்கள் இரட்டை இலையை எடுத்தாலும், எச்சில் இலையை எடுத்தாலும், அது பற்றி கவலை இல்லை,'' என்றார்.
பின், சுதாரித்து, ''சபரிமலையில் பக்தர்கள் அன்னதானம் நடத்திய பின், கன்னி அய்யப்ப பக்தர்கள், எச்சில் இலையை எடுக்க செய்வர். அதைத் தான், எச்சில் இலை என்று சொன்னேன்,'' என, சமாளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரி - Chennai,இந்தியா
19-ஏப்-201723:19:58 IST Report Abuse
நரி இது உலகறிந்த விஷயம்.....பச்சை பிள்ளை கூட சொல்லிடும் ....இதை பிரஸ் மீட்ல சொல்லனுமா ..
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
19-ஏப்-201719:35:57 IST Report Abuse
ராமசாமி பொண்ணு நீ ரொம்ப தமாசு. wide பால் ல அவுட் கொடுத்த அம்பயர் நைஸா தொப்பியை சொறியிற மாதிரி நல்லா சமாளிக்கிறீர்
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
19-ஏப்-201718:08:06 IST Report Abuse
Ganapathy பொன் ராதா அவர்களே நீங்கள் அதிமுகவை எச்சில் இல்லை எடுப்பவர்கள் என்று கூறியதில் தவறு இல்லை. உங்களுக்கு தெரியாம தெரியாதோ இன்று பல உன்னத பதவிகளில் உள்ளவர்கள் எல்லாம் நாம் சமூகத்தில் மட்டமான வேலை என்று நினைப்பதை ஒரு காலத்தில் செய்து வந்துள்ளனர். நீங்க மூத்திர சந்துல வச்சு கதற கதற அடிச்சாலும் அவர்கள் பதிலுக்கு அடிக்கமாட்டார்கள் என் நா அவர்கள் ரொம்ப நல்லவர்கள் . ஒரு காலத்தில் யார் , யாரிடம் பிச்சை கேட்டார்கள் என்பதை நினைத்து பார்க்கிறேன், சிப்பு வருது காலத்தின் கோலம், ஜெயா வின் முட்டாள் தானம், பிஜேபி ஐ வளர்த்து விட்டது, இல்லாவிடில், நீங்கள் அதிமுகவை எச்சில் ஏழை என்பிர்களா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X