தினகரன் மீதான வழக்கு இன்று விசாரணை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் மீதான வழக்கு இன்று விசாரணை

Added : ஏப் 18, 2017

சென்னை : சசிகலா, தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள், இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்குகள், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் - 1 மற்றும், 2வது நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. நேற்று, சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1ல், மாஜிஸ்திரேட், ஜாகிர் உசேன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணை, இன்று நடக்கும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சசிகலா, பெங்களூரு சிறையில் இருப்பதால், அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராக அனுமதி கோரியும், மனு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கும், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1ல், மாஜிஸ்திரேட் மலர்மதி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X