அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா, குடும்பம், எதிரான, தர்மயுத்தம், சாதித்தாா், பன்னீா்!

சென்னை: சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சாதித்து காட்டியுள்ளார். அ.தி.மு.க., வில் இருந்து, தினகரன் கும்பல் அடியோடு வெளியேற்றப்பட்டது. முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தொண்டர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

சசிகலா, குடும்பம், எதிரான, தர்மயுத்தம், சாதித்தாா், பன்னீா்!

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சு, நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று காலையில், 'இரு அணிகளும் இணைய, சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிரடி நிபந்தனை விதித்தார்.
அது தொடர்பாக, நேற்று காலை, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் ஆகியோர், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியுடன் அவசர ஆலோசனை

நடத்தினர். பின், அமைச்சர்கள் முடிவை, தினகரன் வீட்டுக்கு சென்று, அவரிடம் கூறினர்.

விவாதித்தனர்


மாலை,6:30 மணியில் இருந்து, 7:30 மணி வரை, தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித் தனர். அதன் முடிவில், சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என, முடிவு செய்தனர். அதை, அனைத்து அமைச்சர் களும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு சென்று, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தனர்.அங்கு இரவு, 8:00 மணியில் இருந்து, 9:20 மணி வரை, முதல்வர் தலைமை யில், இறுதிகட்ட ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர்களுடன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கும், குழப் பத்திற்கும் தீர்வு காண, கட்சியிலும், ஆட்சியி லும் இருந்து, சசிகலா, தினகரன் மற்றும் அவர் களின் குடும்பத்தினரை, விலக்கி வைப்பது தான் ஒரே வழி என, முடிவு செய்தனர். அதை, நிதியமைசசர் ஜெயகுமார் அதிகாரப்பூர்வமாக, இரவு அறிவித்தார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறிய தாவது:கட்சியையும், ஜெயலலிதாவின் பொற் கால ஆட்சியையும், வரும் நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலம்

Advertisement

தொடர, உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பேசி னோம். அனைவருடைய ஒரு மித்த கருத்து, அ.தி.மு.க., தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பம், தமிழக மக்களின் ஒரே கோரிக்கை எல்லாமே, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத் தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

அதற்காக, தினகரன் சார்ந்த குடும்பத்தை, முழுமையான அளவிற்கு ஒதுக்கி விட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

அமைச்சர்கள் விருப்பம்


இது, தொண்டர்கள் விருப்பம்; பொது மக்கள் விருப்பம்; தலைமை நிர்வாகிகள் விருப்பம்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் விருப்பம். அது, நிறைவேற்றப்பட்டு உள்ளது. தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு, எள்ளளவும் கட்சியிலும், ஆட்சியிலும், அவர்களின் தலையீடு இல்லாமல், கட்சியை, ஆட்சியை வழி நடத்துவோம்.

கட்சியை வழி நடத்த, அன்றாட நடவடிக்கை கள் மேற்கொள்ள, குழு அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப் படும். அனைத்து அமைச்சர்களும், எம்.பி.,க் களும், எம்.எல்.ஏ.,க்களும், இந்த கருத்தை ஆதரிக்கின்றனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்றார்; நாங்களும் தயார் என்றோம். நாளையே வந்தாலும் பேசத் தயார். அனை வரும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம். கட்சியை கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல விரும்புகிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.

தொண்டர்கள், பொது மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளித்து, அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்து, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத் துவோம்.இவ்வாறு ஜெயகுமார் தெரிவித் தார். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி., வைத்தி லிங்கம் ஆகியோர் கூறும்போது, 'பன்னீர் அணியினர் பேச வந்தால், பேசத் தயாராக உள்ளோம். அவர்கள் கூறும் கருத்தை ஏற்பது குறித்து, குழு கூடி முடிவு செய்யும்' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
20-ஏப்-201723:15:30 IST Report Abuse

Rajamani KsheeravarneswaranOPS தன் பதவியை ராஜினாமா செய்து அவர் தொகுதியில் இரட்டை விளக்கு அல்லது மின்கம்பம் சின்னத்தில் நின்றுவெற்றி பெற்று மக்கள் ஆதரவை நிரூபிக்கட்டும் . அங்கு அதிமுக அம்மா அணியின் ஒருவர் தொப்பி சின்னத்தில் நிற்கட்டும் அப்போது OPS வெற்றி பெற்றால் அதிமுகவை அவரே தலைமை தாங்கட்டும்.

Rate this:
bairava - madurai,இந்தியா
20-ஏப்-201700:50:18 IST Report Abuse

bairava அப்படியெல்லாம் பெரிய சாதனைன்னு சொல்லமுடியாது ஆட்சியையும் கட்சியும் இல்லைன்னா இந்த மந்திரிமார்கள் அனைவரும் சித்தியோட சேர்ந்து களி தான் திண்ணனும் அதற்கு காரணம் வேலைக்காரி மாபியா கும்பலின் ஏவல் தினகரன் செய்த அப்பட்டமான மோசடி அரசியலே காரணம் ஆகவே இந்த மந்திரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இனி யாரையும் ஜெயிலுக்கு போகவிடக்கூடாதுனு ஒன்னு சேர்ந்து ஆட்சியை பிடித்து தங்களையும் சொத்துக்களையும் பாதுகாத்து கொண்டு ஆட்சி செய்ய போட்ட திட்டம் தான் இது .இதில் மக்களுக்காக ஒன்னும் இல்லை இதை புரிந்து கொண்டு தமிழர்களாகிய மக்கள் வாழ வேண்டும்

Rate this:
Aysha - Duai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-201723:19:43 IST Report Abuse

Ayshaஇதில் நிச்சயமாக உள்நோக்கம் கள்ளத்தனம் தெரிகிறது. காரணம்: 1. காலையில் ஒளிபரப்பாகிய புதிய தலைமுறை டிவி புதுப்புது அர்த்தம் ப்ரோக்ராமில் அன்வர் ராஜா (சசி அணி) பேசும்போது , தினகரன் தான் நீக்க படுகிறார், சசிகலா அல்ல என்று சொன்னது 2. தினகரன் ஒதுங்குவதாக உருகி சொன்னது (ஆனால் ராஜினாமா செய்ய சசிகலா சொன்னால் தான் ராஜினாமா)என்று சொன்னது. ஏதோ போலித்தனமும் உள்ளடி வேலையும் எட்டப்படியும் அமைச்சர்களும் தினகரன் மற்றும் சசி கலாவின் கள்ளத்தனமான ஐடியா என்று தோணுகிறது. 3. தம்பிதுரையும் மற்றவர்களும், தினகரன் சப்போர்ட் புகழேந்தியும் நிச்சயம் ops முதல்வர் ஆக 100% சம்மதிக்க மாட்டார்கள். ஏமாற்ற திட்டமிடுகிறார்கள். Ops டீம் ஜாக்கிரதையாக புத்திசாலித்தனமாக இருங்கள்.சசிகலா எந்த லெவெலுக்கும் ஐடியா பண்ணுவார் என்பதை மறக்க வேண்டாம்.

Rate this:
மேலும் 117 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X