அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றுபட்ட அ.தி.மு.க., : வாசன் ஆசை

Added : ஏப் 19, 2017
Advertisement

ராமநாதபுரம்: மக்கள் விரும்பும் ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை ஆதரிப்போம், என த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நீர் நிலைகளில் மராமத்து பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு நிறைவேற்றி, தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும். காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்தவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை படிப்படியாக தீர்க்க அரசு உறுதியளிக்க வேண்டும். இலங்கையில் சேதமடைந்த தமிழக விசைப்படகுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இரட்டை சிலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது. லஞ்சம் கொடுத்தது உறுதியானால், தவறு செய்தவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கையை தடுக்க இயலாது. ஓ.பி.எஸ்., அணி தலைமையிலான கூட்டணியில்
த.மா.கா., உள்ளது. அவரின் தலைமையில் மக்கள் விரும்பும் ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை, த.மா.கா., ஆதரிக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X