அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையை கூட்ட ஸ்டாலின் கோரிக்கை

Added : ஏப் 19, 2017
Advertisement

சென்னை" 'தமிழக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது; உடனடியாக, சட்டசபையை கூட்ட, கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் வெடிக்கின்றன. போராடும்
மக்களை சந்தித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண, அமைச்சர்களும் முன்வருவதில்லை; ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்களும் விரும்புவதில்லை.குடிநீர் கேட்டு, அமைச்சர் செங்கோட்டையனை மறித்து, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வரின் தொகுதியில், அடிப்படை
வசதிகளுக்காக போராட்டம் நடக்கிறது.தமிழக நலன்கள் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. முற்றிலும் செயலிழந்துவிட்ட அரசால், இன்று நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. அமைச்சர்களும், முதல்வரும், தங்கள் கடமையை மறந்து, உள்கட்சி பிரச்னையில் உறைந்து போயிருக்கின்றனர்.
மானியக் கோரிக்கை விவாதத்திற்கு, சட்டசபை தொடரை கூட்ட, கவர்னர் உத்தரவிட வேண்டும். முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகத்தை செயல்பட வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X