அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உல்லாச பயணம்!
கப்பலில் உல்லாச பயணம்:
கரைபுரண்டது உற்சாகம்!

சென்னை வந்துள்ள போர்க் கப்பலில், சசிகலா அணி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், நேற்று உல்லாச பயணம் மேற்கொண்டனர்.

கப்பல், உல்லாச, பயணம்:கரைபுரண்டது, உற்சாகம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., சென்னை' போர் கப்பல், சென்னையின் பெயரை தாங்கியுள்ளதால், பாரம்பரிய முறைப்படி, மூன்று நாள் பயணமாக இங்கு வந்துள்ளது. அதை, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் கள், நேற்று முன் தினம் பார்வையிட்டனர். தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பார்வையிட வரும்படி, கடற்படை அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கிடையே, அ.தி.மு.க.,வில் இரு அணி களும் இணைவதற்கான முயற்சி துவங்கி யுள்ளது. இதனால், பன்னீர் அணி எம்.எல்.ஏ.,க் களும் வருவர் என எதிர்பார்க்கப் பட்டது; ஆனால், வரவில்லை.மேலும், தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தினகரன் சிக்கியுள்ளதால், சசி அணியினர் வர மாட்டார்கள் என கருதப்பட்டது.

ஆனால், நேற்று காலை, 7:00 மணி முதல், எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும், குடும்பத் தினருடன் வந்திறங்கினர். அவர்களில், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.,க் கள்; நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட சில எம்.பி.,க்கள், 'ஐ.என்.எஸ்., சுமேதா' கப்பலில் சென்றனர்.

ஜெயக்குமார், ராஜு, ஓ.எஸ்.மணியன், விஜய பாஸ்கர், நிலோபர் கபில் உள்ளிட்ட, 14க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும், 106 எம்.எல்.ஏ.,க்கள், நான்கு எம்.பி.,க்கள் வந்திருந்தனர்.

இக்கப்பல்களுடன், 'ஐ.என்.எஸ்., ரன்வீர்' போர்க் கப்பலும் சேர்ந்து கொண்டது.இது, நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ராக்கெட்களை செலுத்துவது, துப்பாக்கியால் சுடுவது என, சாகசங் களை செய்தபடியே பின்தொடர்ந்தது. ஐ.என்.எஸ்., சென்னை கப்பலும், தன் பங்கிற்கு சாகசங்கள் செய்தது.


உற்சாக வெள்ளம்:


பெரும்பாலான எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் அமைச்சர்கள், ஐ.என்.எஸ்., சென்னை கப்பலில் பயணம் செய்தனர். அவர்கள், மகன், மகள், பேரன், பேத்தி என, குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழித்தனர். அவர்களுக்காக, இரு கப்பல் களிலும் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு இருந்தது.

நடுக்கடலுக்கு சென்ற பின், கப்பல்வேகமாக, அசைந்து அசைந்து சென்ற போது, கடற்படை யினர் ஆசையாக கொடுத்த ரொட்டி, பிஸ்கெட், ஜூஸ் எல்லாம் அடிவயிற்றில் இருந்து மேலே வர துடித் தன. இதனால், பலர், கப்பல் கரையை அடையும் வரை, கீழ்தளத்தில் இருந்த கழிப்பறைக்கு போவதும், வருவதுமாக இருந்தனர்.ஒரு வழியாக, கடலில், 20 கடல் மைல் சென்ற பின், மாலை, 4:00 மணிக்கு, கப்பல் கரை திரும்பியது.

கப்பலில் கடத்தலா?


கப்பலில் பயணம் செய்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, ரகசிய கூட்டம் நடக்க இருப்பதாக, 'வாட்ஸ் ஆப்' மூலமாக தகவல் வந்தது. இதனால், கப்பலில் திட்டமிட்டு கடத்தப்படுகிறோமோ என்ற பயம் தெரிந்தது.அப்படி எதுவும் இல்லை என தெரிந்த பின், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சில எம்.எல்.ஏ.,க் கள் கூறும்போது, 'கப்பலில் பிரம்மாண்ட அறையில் ஆலோசனை நடக்கும் என நினைத்தோம். இங்கே வெட்டவெளியில் உட்கார வைத்து விட்டனர். எனினும், போர்க் கப்பல் அனுபவம் புதிது' என்றனர்.

விஜயபாஸ்கர் வருத்தம்!


கடைசி நேரத்தில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குடும்பத்துடன் வந்து ஏறினார். செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். அப்போது, 'என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட் டது. அதை கடுமையாக உழைத்து, சரி செய்வேன். வருமான வரி சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் போலியானவை. நான் திருமணத் துக்கு போனால், ஓடியாடி வேலை செய்யும் ரகம். கட்சியிலும் ஓடியாடி வேலை செய்தேன். அதனால் தான், இலக்காக ஆகியுள்ளேன்' என்றார்.

இணைப்புக்கு ஆதரவு!:


அமைச்சர்கள், ராஜு, ஜெயகுமார், உதயகுமார் உள்ளிட்டோர் பேசுகை யில்,இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டியது அவசியம்.

Advertisement

இரு தரப்பும் இணைவது தான், கட்சியின் எதிர்காலத்திற்கு உகந்தது. மக்களும், அதை தான் விரும்புகின்றனர். இது அண்ணன் - தம்பி பிரிவைப் போன்றதே. இரு தரப்பும் இணைய அமைக்கப்பட்ட குழு, விரைவில் பேச்சு வார்த்தை நடத்தும் என நம்புகிறோம்' என்றனர்.

பெண் எம்.எல்.ஏ.,உடல்நிலை பாதிப்பு


கப்பல் குலுங்க துவங்கியதும், மண்ணச்ச நல்லுார் எம்.எல்.ஏ., பரமேஸ்வரிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு சோர்வு அதிகரித்ததால், தனி அறையில் ஓய்வு எடுத் தார். பின், அவருக்கு மாத்திரை வழங்கப் பட்டது. ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டது.

மனைவியை இழந்த சோகம்...


கப்பலில் உற்சாகமாக பயணம் செய்து கொண்டிருந்த, சீர்காழி எம்.எல்.ஏ., பாரதிக்கு, அவரது மனைவி மாரடைப்பால் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரை சுற்றி அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.,க்களும், சோகம் அடைந்தனர்.

தி.மு.க., - காங்.,அழைப்பு இல்லை!


கடற்படை அழைப்பிதழ்கள், முதல்வர் அலுவலகத்தில் தரப்பட்டுள்ளன. ஆனால், அவை, சசிகலா அணிக்கு மட்டும் வழங்கப் பட்டதாக தெரிகிறது. இதனால், பன்னீர் அணி, தி.மு.க., - காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வர வில்லை. அத்துடன், அ.தி.மு.க., 'மாஜி' அமைச் சர் செந்தில் பாலாஜி போன்றோரும் புறக்கணித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
20-ஏப்-201700:55:15 IST Report Abuse

bairava தமிழக மக்களே இனிமேல் உங்களின் வாக்கு இது போன்ற தமிழின துரோகிகளுக்கு கூடாது உங்களின் வாக்கு அடிமை அரசியல்வாதிகள் (அதிமுக)..ஊழல் அரசியல்வாதிகள்(திமுக ) ..தமிழனின் துரோக அரசியல்வாதிகள் (பி ஜே பி ) இல்லா கட்சிக்கே இருக்கவேண்டும் என்பத உணர்ந்து செயல்படுங்கள்

Rate this:
GOWDHAMAN G - west bengal,இந்தியா
19-ஏப்-201720:27:22 IST Report Abuse

GOWDHAMAN Gரொம்ப முக்கியம். இந்த கப்பல்ல நாட்டுக்கு ஆக உயிர் எலந்தவங்க பார்டர் செக்யூரிட்டி family'ஸ் invite பன்னிருந்த, ஆல் இந்தியன் சந்தோச பட்டுருப்பாங்க சார் ஜெய் ஹிந்தி

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-ஏப்-201718:39:58 IST Report Abuse

ezhumalaiyaanகூவத்தூர் (கேம்ப் I ) என்று அழைத்தால், இந்த ட்ரிப்பை கடல்மேலே ஜாலி (கேம்ப்.2 ). சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்திருக்க வேண்டும் . அதெப்படி மத்திய அரசின் கீழ் நடக்கும் கப்பலில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஒரு பிரிவினை அணிக்கு மட்டும் இந்த வாய்ப்பு.? யார் ஏற்பாடு செய்தது? யாருக்காக செய்தது ? தவறான முன் உதாரணம். .ENQUIRY தேவை.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X