அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்'கை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர் கைது

Added : ஏப் 19, 2017
Advertisement

தேனி;தேனியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாவட்ட பா.ஜ., சார்பில் தேனியில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.மாவட்ட தலைவர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தர், எஸ்.சி.,எஸ்டி,. பிரிவு தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.,வினர் கடைக்குள் புக முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்த போது இரு தரப்பிற்கும் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி பா.ஜ.,வினர் சிலர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஷட்டரை இழுத்து மூடினர். பின்னர் போலீசார் அவர்களை வெளியேற்றினர். அட்டை பெட்டியில் மதுபாட்டில் போன்ற வடிவமைக்கப்பட்ட மது அரக்கன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர், வழக்கறிஞர் அணி பிரிவு தலைவர் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஐ.டி.பிரிவு தலைவர் பாஸ்கர், பிரசார அணி தலைவர் சந்தன துரை, நகர தலைவர் ரவிக்குமார், நகர பொது செயலாளர் முருகன், இளைஞர் அணி தலைவர் தேவகுமார் உட்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
* ஆண்டிபட்டி சிலுக்குவார்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ..,வினர் கடை முன் முற்றுகையிட்டுஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் குமார் தலைமை வகித்தார். 15 பேரை ஆண்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம்: பெரியகுளத்தில் பா.ஜ., சார்பில் திருவள்ளுவர் சிலை பின்புறம் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை நடத்தினர். நகர தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கணேஷ்குமார், 100 பெண்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடை ஒரு மணி நேரம் அடைக்கப்பட்டிருந்தது.
கம்பம்: கம்பம் நாலந்தா மெட்ரிக்., பள்ளி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, நகர பா.ஜ., தலைவர் திருமால் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கடை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X