அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜ., போராட்டம்

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை:மதுரையில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ., நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.சோலையழகுபுரத்தில் மாநில துணைத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆரப்பாளையம் புட்டுத்தோப்பில் பொதுச்செயலர் பாரதிராஜ், துணை தலைவர் ஹரிஹரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி மாநில தலைவர் மகாலட்சுமி, செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் நகர் தலைவர் சசிராமன் தலைமையில் 14 பேரும், தனக்கன்குளத்தில் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் 22 பேரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுார்புதுார் ஜவஹர்புரத்தில் மண்டல தலைவர் ஜோதிமணிவண்ணன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் கட்சியினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் கைது செய்யப்பட்டனர்.
மேலுார்
திருவாதவூரில் மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மலையவீரன், நகர் பொறுப்பாளர்கள் தென்னரசு, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி ஒன்றியத்தலைவர் சந்திரமோடி தலைமையில் வில்லாணி சாலையில் உள்ள கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள்சேடபட்டி ஒன்றிய தலைவர் மாத்துாரான் தலைமையில்எம்.கல்லுப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கடையிலும், செல்லம்பட்டி ஒன்றியத்தலைவர் செல்வம் தலைமையில்கொடிக்குளம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கடையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாடிப்பட்டி
ஆண்டிபட்டி பங்களா கச்சைகட்டி சாலையில் உள்ளமதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்கு முன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 16 பேரைபோலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-201707:37:05 IST Report Abuse
ரங்கன் எல்லாருக்கும் வெஜிடேரியன் பீர் ஊத்திக் குடுங்க....சரியாயிடும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X