அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் மீதான வழக்கு இன்று விசாரணை!

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (9)
Advertisement
Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன், வழக்கு, இன்று, விசாரணை

சென்னை : சசிகலா, தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள், இன்று(ஏப்.,19) விசாரணைக்கு வருகின்றன.


இன்று விசாரணை:

இந்த வழக்குகள், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் - 1 மற்றும், 2வது நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. நேற்று, சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1ல், மாஜிஸ்திரேட், ஜாகிர் உசேன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணை, இன்று நடக்கும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.


வீடியோ கான்பரன்ஸ்:

இதற்கிடையில், சசிகலா, பெங்களூரு சிறையில் இருப்பதால், அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராக அனுமதி கோரியும், மனு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கும், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1ல், மாஜிஸ்திரேட் மலர்மதி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
19-ஏப்-201715:33:24 IST Report Abuse
karunchilai தினகரன் மீது எப்போது குற்றபக்ஷ பத்திரிகை தாக்கல் செய்வார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
19-ஏப்-201708:39:57 IST Report Abuse
Barathan குமாரசாமி தீர்ப்புபோல் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201708:10:05 IST Report Abuse
Srinivasan Kannaiya தினகரன் பணத்தை எடுத்து கொண்டு நீதிபதியிடம் செல்லாமல் இருந்தால் சரி...அந்த மன்னார்குடி குடும்பத்திடம் உள்ளது பணம் ஒன்றுமட்டும் தான் ...இல்லாதது ...புத்தி..நீதி ,நியாயாம்... விசுவாசம்... என்று எல்லாவித நல்ல அம்சங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X