அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனுக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு? தப்பிக்குமா பழனிசாமி அரசு?

Updated : ஏப் 19, 2017 | Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (63)
Advertisement
தப்பிக்குமா பழனிசாமி அரசு?

சென்னை: தினகரன் பக்கம் ஏற்கனவே 9 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏ.,க்கள் சாயும் பட்சத்தில் பழனிசாமி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அவருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தருவது கேள்விக்குறி தான்.


தினகரன் பக்கம் 8 பேர்:

சசி அணியிலிருந்தவர்கள், பன்னீருடன் இணைந்து தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவிட முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர். தினகரனுக்கு ஆதரவாக தற்போது 9 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். ஒருவேளை பழனிசாமியின் அரசை கவிழ்க்க தினகரன் முயற்சிக்கும் பட்சத்தில் அவருக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.


நடக்குமா?

சட்டசபையில், சபாநாயகர் உட்பட 135 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,விற்கு உள்ளனர். நம்பிக்கை ஓட்டெடுப்பில் சசி தரப்பிற்கு 122 பேரும், பன்னீர் அணிக்கு 11 பேரும் ஓட்டளித்தனர். அதனால் பழனிசாமி அரசு அப்போது தப்பியது. சசி அணியில் 122 எம்.எல்.ஏ.,க்களிலிருந்து 6 பேர் விலகினால் போதும், அது தினகரனுக்கு சாதகமாகி பழனிசாமி ஆட்சி கவிழும் சூழல் உருவாகும். ஆனால் பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைந்தால், பன்னீர் அணியிலுள்ள 11 பேரும் தோள் கொடுத்து ஆட்சியை காப்பாற்றி கொள்வர். எனவே ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட தினகரனுக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போது தினகரன் பக்கம் 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இன்னும் 8 பேரை தினகரன் இழுக்கும் பட்சத்தில் எடப்பாடி அரசு கவிழும். ஆனால் தினகரன் பக்கம் வேறு எம்.எல்.ஏ.,க்கள் தாவுவது சந்தேகமே.


கூடுமா கூட்டம்:

இந்நிலையில் இன்று(ஏப்.,19) மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்திற்கு ‛கூட்டம்' கூடுமா என்பது கேள்விக்குறியே.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
19-ஏப்-201715:59:06 IST Report Abuse
S ANBUSELVAN இவர்கள் எல்லோருமே திருடர்கள்... அதற்கு தடையாக யாரும் வந்தால் அதனை எதிர்த்து ஒன்று சேர்வார்கள்... மக்கள் பிரச்சனைக்கு என்றால் இப்படி ஒன்று சேர்ந்தார்களா ? தங்கள் பதவிக்கு ஆபத்து என்றவுடனே இவர்கள் புனிதர் போல நாடகமாடுகிறார்.... கடந்த 34 நாட்களாக டெல்லியில் போராடும் விவசாயிகள் பற்றி எந்த MLA யாவது அதுபற்றி கவலைப்பட்டது உண்டா? காவிரி பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது இதே MLA க்கள் ஜெயாவிற்காக மண் சோறு, தீச்சட்டி எடுத்தல் என நாடகமாடினர்.... ஆட்சியை கவிழ்த்தால் இவர்களில் ஒருத்தனும் மீண்டும் பதவிக்கு வர இயலாது... அதனால் தான் வரும் 4 வருடங்களில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ எவ்வளவோ கொள்ளை அடிப்பதற்காக ஒன்று சேர்க்கின்றனர்..... முதலில் அம்மா என்று சொல்லி அவர் ஆதரவோடு கொள்ளை அடித்தனர்... அவரின் மரணத்திற்கு உறுதுணையாக இருந்து சசியை சின்னம்மா என்று வாய் கூசாமல் சொல்லி பதவியை தக்க வைத்தனர்... அவர் சிறைக்கு சென்றவுடன் தினகரனுக்கு துணை போது செயலாளர் பதவி கொடுக்கும் போது பேசாமல் இருந்து, தற்போது ஆட்சி கவிழ்ந்து தங்கள் கொள்ளை பாதிக்கப்படும் என்ற நிலைமை வந்தவுடன் தற்போது ஒன்று சேர்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
nanban - mumbai,இந்தியா
19-ஏப்-201713:49:00 IST Report Abuse
nanban ஜெயாவின் ஆத்மா வெறியோடு அலைகிறது. அது சசி கும்பலை பழி வாங்காமல் விடாது. ஓயாது.
Rate this:
Share this comment
Cancel
Gnani - Casabalanca,மொராக்கோ
19-ஏப்-201713:44:21 IST Report Abuse
Gnani சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் அதிமுக குற்றவாளிகளின் கையில் தான் நேரிடையாகவோ அல்லது மறைமுகவாகவோ உள்ளது. இப்போது செல்லரித்து, கரையான் புற்று தோன்றி அதில் கருநாகங்கள் குடியிருக்கின்றது. வாக்காளர்கள்தான் பாம்புக்கு பால் வார்ப்பதா இல்லை பாம்பை பிடித்து தோலுரிப்பதா என்று சிந்திக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X