அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை கவிழ்க்க தமிழிசை பந்தயம் : நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (67)
Advertisement
தமிழிசை சவுந்தரராஜன், நாஞ்சில் சம்பத், தினகரன், சசிகலா, ஆட்சி கவிழ்ப்பு, பந்தயம்

சென்னை : தமிழகத்தில் ஆட்சியை கவிழ்த்து காட்டுவோம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது நண்பரிடம் பந்தயம் போட்டுள்ளார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


இன்று நல்ல முடிவு :


சென்னை அடையாறில் தினகரன் வீட்டில், நாஞ்சித் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சிக்கு தினகரன் தலைமை ஏற்பதே சரியாக இருக்கும். இன்று மாலை நடைபெறும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பிறகு தினகரன் முக்கிய முடிவை அறிவிப்பார். அது லட்சக்கணக்கான தொண்டர்களின் மனவருத்தத்திற்கு மருந்து போடும் விதமாக இருக்கும். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் தினகரனின் தலைமையை ஏற்பார்கள்.


தமிழிசை பந்தயம் :


33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்கும் முடிவு ஏற்புடையதல்ல. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற முடிவின் பின்னணியில் பா.ஜ., உள்ளது. ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று தமிழிசை நண்பர் ஒருவரிடம் பந்தயம் வைத்துள்ளார். அதற்கு வாய்ப்பில்லையே என அவர் விவாதம் செய்த போதும். ஆட்சியை கவிழ்த்துக் காட்டுவோம் என தமிழிசை பந்தயம் போட்டுள்ளார். தினகரனுக்கு எதிராக பாஜவினர் சதி செய்கின்றனர்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் எனும் அழுத்தம் சிலரால் கொடுக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்க பூமியில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை போன்ற அதிகார மையங்களை பாஜ., கேடயமாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
20-ஏப்-201701:23:46 IST Report Abuse
Agni Shiva இந்த நாஞ்சில் சம்பத்தின் வீடு கீழ்ப்பாக்கத்தில் தானே இருக்கிறது? அந்த அளவிற்கு அங்குள்ள மருத்துவமனையில் ஒரு படுக்கை கூடவா இல்லாமல் போய் விட்டது?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஏப்-201716:26:20 IST Report Abuse
Endrum Indian ஒரு வாரம் முன்னாடி இதே தினமலரில் வந்தது தமிழிசை சொல்வதெல்லாம் நடக்கின்றதென்று (சனி நாக்கு) அப்போ இதுவும் மிக விரைவில் நடக்கும். 168 நாள் இருக்கின்றது ஆட்சி கவிழ.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஏப்-201716:03:21 IST Report Abuse
Cheran Perumal தகர டப்பாவில் கூழாங்கற்களை போட்டு குலுக்குங்கள். அந்த சப்தம் போலில்லை நாஞ்சில் சம்பத் பேசுவது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X