பாபர் மசூதி வழக்கு: அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவு

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (47)
Share
Advertisement
பாபர் மசூதி இடிப்பு, அத்வானி, சிபிஐ, சுப்ரீம் கோர்ட், மீண்டும் விசாரணை

புதுடில்லி : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சிபிஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சிபிஐ மேல்முறையீடு :


பா.ஜ., மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபர்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஐகோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில் பா.ஜ., தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.


சுப்ரீம் கோர்ட் அதிரடி :


இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சிபிஐ.,க்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடங்களுக்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் இருந்து கல்யாண் சிங் விடுவிக்கப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja segaran - bhopal, madhya pradesh.,இந்தியா
19-ஏப்-201720:39:47 IST Report Abuse
Raja segaran NEED OF THE HOUR. Let us not use the TERM, "JUSTICE DELAYED, JUSTICE DENIED".
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஏப்-201719:21:57 IST Report Abuse
Pasupathi Subbian மற்ற பிரச்சனையில் வாய்மூடி மெளனமாக இருக்கும் அக்கரை சீமான்கள், இங்கே எதோ அத்வானிக்கு ஆதரவாக இருப்பது போல , மோடியை தாக்கி தங்களின் அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. அத்வானி வருவதும் வராததும் அக்கட்சியின் சொந்த பிரச்சனை, இதில் இவர்களுக்கு கருத்து சொல்ல அருகதையே இல்லை . வேலையும் இல்லை
Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
19-ஏப்-201722:29:57 IST Report Abuse
தங்கை ராஜாஅருகத்தையே இல்லை என்று சொல்வதற்கு அருகதை வேண்டுமே....
Rate this:
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
19-ஏப்-201719:09:45 IST Report Abuse
Karuthukirukkan அடடே இங்கே அத்வானிக்காக பொங்கும் பிஜேபி சொம்புகள் கவனத்திற்கு .. அங்கு இடிக்கப்பட்டது மசூதியா இல்ல அங்க 400 வருஷம் முன்னாடி கோயில் இருந்துச்சா என்று இப்போ பிரச்சனை இல்லை .. அங்க கோயில் கட்டுங்க, மசூதி கட்டுங்க இல்ல நாலு மரத்தைகூட நட்டு வைங்க .. ஆனா அந்த ரத யாத்திரை நடத்தி மசூதி இடிப்புக்கு பின் 2000 அப்பாவி ஹிந்து , முஸ்லிம்கள் அடிச்சிட்டு செத்து போனாங்களே அதெல்லாம் என்ன கணக்கு சொம்புகளே ?? அந்த 2000 பேர் இந்தியர்கள் இல்லையா தேசியவாதிகளே ?? அந்த கேவலமான சம்பவத்திற்கு பிறகு இந்த தேசத்தின் ஒருமைப்பாடு குலைந்து போயிருக்கே தேசியவாதிகளே ?? 400 வருஷத்திற்கு முன் ஆண்ட மூர்க்கத்தனமான அரசன் இடித்தான் அதனால் இப்போது இடித்தது நியாயம் என்று சொல்லும் மகான்களே, மன்னர் ஆட்சிக்கும் மக்கள் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியுமா ?? சுதந்திரத்துக்கு பிறகு என்ன என்ன அப்பிடி இருந்ததோ அது தான் இந்தியாவின் தொடக்க நிலை .. எல்லா மன்னர் ஆட்சியும் லட்சக்கணக்கில் கொலைகள் செய்து , கோயில்கள் , மசூதிகள் , சர்ச்சுகள் இடித்து தான் நடத்த பட்டுள்ளன .. அதெல்லாம் இப்போ கணக்கு எடுத்து பலி வாங்க போறீங்களா அறிவாளிகளே ?? உங்க கையில் எல்லாம் நாடு போயிருக்கு பாரு , இந்த நாட்டு மக்களை சொல்லணும் .. கொடுமை ..
Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
19-ஏப்-201722:31:24 IST Report Abuse
தங்கை ராஜாகருத்து கிறுக்குத்தனமாக இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X