அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது : ஸ்டாலின்

Updated : ஏப் 19, 2017 | Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (10)
Advertisement
சட்டசபை கூட்டம், ஸ்டாலின் மனு

சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தமிழக சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் நேரில் சென்று மனு அளித்தார். விவசாய பிரச்னை, தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்க வேண்டும் என அந்த மனுவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான மானிய கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. அவை குறித்து விவாதிப்பதற்காக சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என சபாநாயகர் தனபாலை சந்தித்து மனு அளித்துள்ளோம். முதல்வரை சந்தித்தும் மனு அளிப்பதற்காக காத்திருந்தோம். அரைமணிநேரம் காத்திருந்தும் முதல்வரை பார்க்க முடியவில்லை. அதனால் அந்த மனுவை தலைமை செயலாளரிடம் அளித்து விட்டு வந்துள்ளோம்.
மானிய கோரிக்கை மட்டுமல்ல விவசாயிகள் பிரச்னைகளுக்காக டில்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதற்கு நல்ல முடிவு காண வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. இவை தீர்க்கப்பட வேண்டும். எதிர்க்கட்சியான எங்களையே சந்திக்க இவர்கள் தயாராக இல்லை. எப்படி விவசாயிகளை சந்திப்பார்கள் என்பது தெரியவில்லை.
உட்கட்சி பிரச்னையில் திமுக தலையிடாது. இரு அணிகளும் மாறி மாறி குற்றம் சொல்லிவிட்டு, இப்போது ஒன்றாக இணைந்து அந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் அரசு ஸ்தம்பித்துள்ளது. கோமா நிலையில் அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரி - Chennai,இந்தியா
19-ஏப்-201723:48:19 IST Report Abuse
நரி இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும்-இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. விளக்கம் இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
19-ஏப்-201718:01:31 IST Report Abuse
rmr இந்த ஊழல் வாதி வரவே கூடாது இவன் ஒரு விளம்பர அரசியல் வாதி ஊழல் குடும்ப அரசியல்வாதி வேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஏப்-201716:22:54 IST Report Abuse
Endrum Indian அரசு நிர்வாகம் செத்து சுண்ணாம்பாகி 50 வருடங்கள் ஆகி விட்டது எப்பொழுது???? இந்த திராவிட ஆட்சி (1967 ) வந்ததோ அன்றிலிருந்து. இல்லையென்றால் தமிழகம் என்றோ இமாலய உச்சியை அடைந்திருக்கும் சாதனையில். இப்பொழுது இருக்கும் ஒரே சாதனை, "75 % டாஸ்மாக் நாடு மக்கள் குடிகாரர்கள்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X