அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் பின்வாங்கியது எப்படி?அசைய வைத்த அனுராதா

Updated : ஏப் 20, 2017 | Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (58)
Share
Advertisement
தினகரன், அனுராதா ,ttv dinakaran, aiadmkmerger

சென்னை:
கட்சியில் இருந்து தினகரன், சசிகலா ஆகியோரோடு, அவர்களது குடும்பத்தினரும் ஒதுங்க வேண்டும் என்று, தமிழக அமைச்சர்கள், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடி முடிவெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, தினகரனின் மனைவி அனுராதா ரொம்பவே கவலை அடைந்தார். இதற்கிடையில், தினகரன் இல்லத்துக்கு, தங்கதமிழ்ச் செலவன், வெற்றிவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மட்டும் சென்றனர். அவர்கள், இனியும் நாம் சும்மா இருக்க வேண்டாம்; நம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். இனிமேல் ஒரு நாள் கூட பழனிச்சாமி ஆட்சி தொடரக் கூடாது. அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இளிச்சவாயர்களா? இவர்கள் சொல்வது படியெல்லாம் கேட்பதற்கு நாம் தலையாட்டி பொம்மைகள் அல்ல என்று சீற்றத்துடன் கருத்துச் சொல்லியிருக்கின்றனர்.தங்கத் தமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும்தான், பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது. அதையடுத்தே, தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும்; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என, நடு இரவில் தெரிவித்தார் தினகரன்.


அனுராதா அட்வைஸ்?:


ஒட்டுமொத்த சம்பவங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் தினகரன் மனைவி அனுராதா, இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று, கணவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே, தினகரன் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டு, அமைச்சர்கள் விருப்பப்படி ஒதுங்கி இருக்கிறேன் என அறிவித்து விட்டார் என, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:அமைச்சர்கள், முதல்வர் வீட்டில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இரவிலும் கூடி, விவாதித்த அத்தனை விஷயங்களையும், தனது தொடர்புகள் மூலமாக தனியாக திரட்டினார் தினகரன் மனைவி அனுராதா. அதில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக திரண்டிருப்பதாகவும், அதிலும் சிலர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விடக் கூடும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.இதற்கிடையில், தினகரன் கூடவே இருந்து, மத்திய அரசை பகைத்துக் கொள்வதில் இருந்து, அமைச்சர்களையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் பகைத்துக் கொள்வது வரையில், எல்லா விஷயங்களுக்கும் காரணமாக இருந்த அந்த சுந்தரத் தலைவர் மீது, அடுக்கடுக்கான புகார்கள், அனுராதாவுக்கு வந்து கொண்டே இருந்தன.
அவரின் தவறான வழிகாட்டுதல்தான் இத்தனைக்கும் காரணம் என்றும் அவர் அறிந்து கொண்டார். உடனே, அவர், தனக்கு நேரடி தொடர்பில் இருக்கும் சில அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு, உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டறிந்தார். அமைச்சர்கள் பலரும், தினகரன் சமீப நாட்களில் நடந்து கொண்ட அத்தனை விதங்களைக் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் கமிஷனில் சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு சிக்கல் வந்தது, தினகரன் மீதான பெரா வழக்கு திடீர் என உயிர் பெற்றது, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னையில் சிக்கியிருப்பது என பல்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் தினகரன் கழுத்தை நெரிப்பதற்குக் காரணம், நிலைமை புரியாமல், தினகரன் நடந்து கொண்டதுதான் என்பதை அறிந்து கொண்டார்.


பாதிப்பால் ஆத்திரம்:

தினகரனுக்கு ஆதரவாளர்களாக அணி திரளும் அத்தனை எம்.எல்.ஏ.,க்களும், சிலரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆத்திரத்தையெல்லாம், தினகரனை வைத்துக் கொண்டு அவர்கள் மேல் காட்டினர். அதெல்லாம் கூட, தினகரனுக்கு எதிரான பிரச்னை தலைக்கு மேல் செல்வதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.


அமைச்சர்கள் பல்டி:

நேற்று வரை, தினகரன் அணியில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, தங்கமணி, வீரமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், அப்படி அப்படியே தினகரனை கழட்டி விட்டு விட்டு, எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அணி திரண்டு, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களையெல்லாம் நம்பி தினகரன் அரசியல் செய்ததே தவறு.
இப்படி மொத்த விவரங்களையும் திரட்டிய அனுராதா, தினகரனிடம் நிறைய பேசினார். அப்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தினகரனிடம் கூறி, அமைதியாக, அமைச்சர்கள் விருப்பம் போல ஒதுங்கி விடுங்கள். இல்லையென்றால், அவர்கள் தொண்டர்களை திரட்டி உங்களை விரட்டி அடிக்கக் கூடும். அது, அவமானத்தை ஏற்படுத்தி விடும். இனி, எக்காரணம் கொண்டும் போயஸ் தோட்டம் பக்கமோ, தலைமைக் கழகம் பக்கமோ போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; ஒட்டுமொத்த நம் குடும்பத்தினரின் கருத்தும்தான். மன்னார்குடி குடும்பம் மாபியா குடும்பம் என்று எல்லா மட்டங்களிலும் சொல்லப்படுகிறது. இந்த மன்னார்குடி குடும்பத்தின் ஒட்டுமொத்த கருத்தும் கூட, சசிகலாவும், தினகரனும் கட்சி ஆட்சியில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான்.
குடும்பமும் கைவிட்ட பின்னால், யாரை நம்பி நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களை ஆதரிப்பதாக கூறும் ஆறு எம்.எல்.ஏ.,க்களும் கூட, நாளையே கூட, அந்தப் பக்கம் போய் விடுவர். அதனால், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம். பெரும் ஆபத்தில் முடியும். எனவே, அமைதியாக, ஒதுங்கி விடலாம். அதுதான், நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது. இப்போதைக்கு ஒதுங்குங்கள். பிறகு எப்படி போகிறது என பார்த்துவிட்டு, அதன்படி செயல்படலாம் என்று உறுதிபட கூறியிருக்கிறார் அனுராதா. தினகரன் தீர்க்கமாக அதன்பின் யோசித்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே, அவர், அமைச்சர்கள் விருப்பப்படி, கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இவ்வாறு அந்த உறவினர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201714:34:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதான் சொல்றேனே, இந்த நோட்டீசு, சிபிஐ, போலீசு, வழக்கு, விசாரணை எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி. இதுக்கெல்லாம் அசந்து போகும் பரம்பரை இல்லை நம்ம திண்ணைக்காரன் பரம்பரை. சொத்துக்காக சொந்த சகோதரனையே விஷம் வைத்து, கழுத்தை அறுத்து கொல்லும் "வீர பரம்பரை".. இப்படி வேற காரணம் சொன்னாத் தான் உண்டு. இல்லாட்டி ஊர்ப்பக்கம் நம்பமாட்டாய்ங்க..
Rate this:
Cancel
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
20-ஏப்-201707:35:23 IST Report Abuse
Vaidhyanathan Sankar தி பாஸ் is always ரைட்
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
20-ஏப்-201704:59:09 IST Report Abuse
Raj மானம் கெட்ட பொழப்பு அரசியல் வாதிகளை சொல்லல, இவர்களை தேர்ந்தெடுத்த அதி புத்திசாலிகளித்தான் சொல்லணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X