அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.,- ஈ.பி.எஸ்., தரப்பு பேச்சுவார்த்தை: முன்னிலைப்படுத்தப் போவது என்ன?

Updated : ஏப் 19, 2017 | Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (48)
Advertisement
ஓபிஎஸ், ஈபிஎஸ்,பேச்சுவார்த்தை,ttvdinakaran, admkmerger

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளான பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைய முடிவெடுத்திருப்பதை அடுத்து, சசிகலா குடும்பத்தினர் ஆட்சி மற்றும் கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் அடுத்தகட்டமாக பேசி, ஆட்சியையும் கட்சியையும் பகிர்ந்து கொள்வது குறித்து முடிவெடுக்க உள்ளனர்.
பேச்சுவார்த்தையின் போது, சில விஷயங்களை முக்கியமாக முன் வைத்து பேச பன்னீர்செல்வம் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பன்னீர் தரப்பு கூறியதாவது:
முதல்வராகவும் கட்சியின் பொதுச் செயலராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்பட்டு பதவி விலக நேர்ந்ததோ, அப்போதெல்லாம், முதல்வர் பதவியில் பன்னீர்செல்வத்தைத்தான் நியமித்தார். அப்படித்தான், மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார் பன்னீர்செல்வம்.
அதனால், இம்முறையும் அவருக்கே முதல்வர் பதவியை அளிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும்; அவர் நிதி, பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்து செயல்படுவார். அதேபோல, கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பில் பன்னீர்செல்வம்தான் இருக்க வேண்டும்.
*ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை விலக்க, உடனடியாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல்கொண்டு, சம்பந்தப்பட்ட எல்லோரையும் விசாரிக்க வேண்டும். விசாரணையில், சசிகலா குடும்பத்தினர்தான், குற்றவாளி என கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*ஓரிருவரைத் தவிர, அமைச்சரவையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் கொண்டுவரத் தேவையில்லை. பாண்டியராஜன், அவசியம் அமைச்சர் ஆக்கப்பட வேண்டும். மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின், தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
*ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தை விரைந்து அரசுடைமையாக்கி, அதை அரசு சார்பிலான நினைவு இல்லமாக்க வேண்டும். அதை மக்கள் பார்வைக்கு விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களெல்லாம், நினைவு இல்லத்தில் வைக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட விஷயங்கள் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அத்தரப்பினர் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - California,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201723:07:06 IST Report Abuse
Tamilan Ivanellaam indha Mannargudi manguni Mafia gangukku innumerable support panradhaalathaan Tamil nadu innum urupadaama irukku
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201705:52:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // ஓ.பி.எஸ்.,- ஈ.பி.எஸ்., தரப்பு பேச்சுவார்த்தை: முன்னிலைப்படுத்தப் போவது என்ன? // எனக்கு 70 உனக்கு 30.. எனக்கு 60 உனக்கு 40.. எனக்கு 50 உனக்கு 50.. இதையே மாத்தி மாத்தி சொல்லிக்குவானுங்க..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201701:15:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நாடகத்தின் முடிவு கதை எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே கொண்டு வந்து விட்டது.. ஜெயலலிதாவை வச்சி சம்பாதிச்சாங்க.... அய்யே.. முதல்வரா முன்னே வச்சின்னு சொன்னேன்.. அப்படியே ஒருத்தரை முதல்வரா வச்சி காலம் தள்ளுவோம்.. இருக்கவே இருக்காரு தர்மத்தின் தலைவன், பழைய டயர்நக்கி, கூன்பாண்டி சிங்கம், மல்லாக்கா விழுந்து வீரம் காட்டும் தங்கம், தேனீ மணல் மாபியா அசிங்கம்.. அவரையே முதல்வரா போட்டு, அம்ம்மா, அம்ம்மா ன்னு ஊரை ஏமாத்தி மொங்கா போடுவோம்.. என்ன முதல்வாராகணும்ன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தப்பு பண்ணிட்டோம்.. மறந்துடுங்க மக்களே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X