சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் கருவி!

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் கருவி!

அமெரிக்காவிலுள்ள இரு பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள், காற்றிலிருந்து நீரை சேகரிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இரவு, 12:00 மணி நேரத்தில் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, ஒரு உலோக- கரிம கலனில் சேகரித்து, பகலில் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி, 2.8 லிட்டர் நீரை இந்த சாதனம் தருகிறது. காற்றில், 20 சதவீத ஈரப்பதம் இருந்தால்கூட இந்த சாதனம் உதவுகிறது. இதற்கு மின்சாரமோ, வேறு எரிசக்தியோ தேவையில்லை
என்பதால், இலவசமாகவே நீர் கிடைக்கும்!பெர்க்லியிலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உமர் யாகி, சில ஆண்டுகளுக்கு முன் உலோக- கரிம கலன் ஒன்றை கண்டுபிடித்திருந்தார். இது பல துறைகளில் இப்போது பயன்படுத்தப்படுகிறது. தன் கண்டுபிடிப்பை காற்றிலிருந்து நீரை உறிஞ்சி எடுக்கவும் பயன்படுத்தலாம் என உணர்ந்து, மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டார்.
உலோக- கரிம கலன், உண்மையில் கடற் பஞ்சுபோல ஈரப்பதத்தை இரவு நேரத்தில் சேமித்து வைக்கிறது. பகலில் சூரிய ஒளி பட ஆரம்பித்ததும், இந்த ஈரப்பதம் ஆவியாகி, மீண்டும் குளிர்ந்து இந்த சாதனத்திற்குள்ளேயே இருக்கும் நுண் குழாய்கள் மூலம் கீழே இறங்கி நீர் கலனில் விழுகிறது. ஏற்கனவே காற்றிலிருந்து நீர் எடுக்கும் சில தொழில்நுட்பங்களை விட தன் கண்டுபிடிப்பு, எளிமையானது, மலிவானது என்கிறார் பேராசிரியர் வாங்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஏப்-201722:52:35 IST Report Abuse
தமிழ்வேல் ஈரப்பதம் அதிகம் உள்ள இந்தியாவிற்கு இது மிகவும் உதவலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X