அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வர், பொதுச்செயலர் பதவி:
அ.தி.மு.க., அணிகள் மோதல்

முதல்வர் மற்றும் பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணி களுக்கு இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது.

 முதல்வர், பொதுச்செயலர், பதவி,அ.தி.மு.க., அணிகள், மோதல்

அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவ தற்கான பேச்சு நடத்த, குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், முதல் வர் மற்றும் பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், இரு அணிகளுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டுள் ளது.
இரு அணியினரும், அப்பதவிகளை பெறுவ தில், ஆர்வம் காட்டுகின்றனர். முதல்வர் பழனிசாமி, முதல்வராக தொடர விரும்புகிறார். அவருக்கு, கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவாக உள்ளனர்.

பொதுச்செயலர் பதவியை பெற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது.பன்னீர் அணியில் உள்ளவர்கள், முதல்வர் மற்றும் பொதுச்செயலர் பதவியை, பன்னீருக்கு தர வேண்டும் என்கின்றனர். ஜெ., இருந்த போது, இரண்டு முறை முதல்வராக்கப் பட்டவர் பன்னீர்செல்வம். எனவே, அவரை

அனைவரும் முதல்வராக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு தான் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே, அவருக்கு பொதுச் செயலர் பதவியையும் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

சசி அணி சார்பில், பன்னீர்செல்வத்திற்கு,நிதி அமைச்சர் பதவியும், எம்.எல்.ஏ., பாண்டியராஜனு க்கு, சட்ட அமைச்சர் பதவியும் தருவதாக தெரி வித்துள்ளனர். அதை, அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இரு அணியினரும், முதல்வர் மற்றும் பொதுச்செயலர் பதவியை பெறுவதில் ஆர்வமாக உள்ளதால், யார் விட்டுக் கொடுக்கப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தம்பிதுரை-வைத்திலிங்கம் வாக்குவாதம்


அமைச்சர்கள் கூட்டத்தில், தம்பிதுரையும், வைத்திலிங்கமும் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர். பேச்சு துவங்குவதற்கு முன், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'முதல்வராக பழனிசாமி தான் நீடிக்க வேண்டும்' எனக்கூறி, குழப்பத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை, பட்டினப் பாக்கத்தில் உள்ள, தம்பிதுரை வீட்டில், அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.

அதில், இரு அணிகள் பேச்சை கலைக்கும் வகை யில், தம்பிதுரை செயல்படுவதாக குற்றம்

Advertisement

சாட்டப் பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தம்பிதுரைக்கும், வைத்திலிங்கத் திற்கும் இடையே மோதல் வெடித்தது.

யாருக்கு பொதுச் செயலர் பதவி என்பதிலும், இருவருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வைத்திலிங்கம், கூவத்துார் விவகாரத்தை இழுத்து உள்ளார். அதற்கு பதிலடியாக, தம்பி துரை சில விஷ யங்களை சொல்ல, ஒருமையில் வசைபாடி உள்ளனர்.

அவர்களை, மூத்த அமைச்சர்கள் சமாதானப் படுத்தி, 'இரு அணிகளின் பேச்சு சுமுகமாக முடியும் வரை, கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம்' என, தம்பிதுரையை எச்சரித்துள்ள னர். அதனால், நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தம்பிதுரை பங்கேற்க வில்லை.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
22-ஏப்-201723:04:10 IST Report Abuse

appaaviடெல்லியில் போராடும் விவசாயிகள், இங்கு பதவிக்காக போராடும் அடி மாடுகள். இதற்கு வெள்ளைக்காரனிடம் அடிமையாக இருந்திருக்கலாம்.

Rate this:
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
22-ஏப்-201721:00:07 IST Report Abuse

Ramachandran CV Ramachandranதமிழக வாக்காளர் பெருமக்களுக்கு குறிப்பாக பெண் வாக்காளர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. பதவிக்காக இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டதையும் தற்போது 4 ஆண்டுகள் பதவியை தக்கவைப்பதற்காக கூடி குலவிக்கொள்வதையும் நன்றாக உற்று கவனியுங்கள். குடிநீருக்காக நாமெல்லாம் அலைகிறோம். இவர்கள் உல்லாச வாழ்க்கைக்காகவும் koovathur ரெசார்ட்டிற்காகவும் அலைகிறார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகளை நன்றாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள் இவர்களில் ஒருவரைக்கூட மீண்டும் தேர்ந்தெடுவிடாதீர்கள். தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு டாஸ்மாக்கை தவிர எதுவும் கிடைக்காது.

Rate this:
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
22-ஏப்-201709:46:10 IST Report Abuse

Kalai Aarashanகனவு காண்பது இயற்கை , அதை நினைவாக்குவது செயல், இவர்களிடம் எது இருக்கிறது?

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X