அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., ,அணிகள், இணைப்பு ,பேச்சு, இரு, தரப்பிலும்...   குழு ,அமைப்பு!

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழுக்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், 'பேச்சுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக யாரும் கருத்து சொல்லக் கூடாது' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இருப்பினும், முன் வைத்த நிபந்தனைகளில் பின்வாங்காமல், பேச்சு நடத்துவது என்பதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது அணியினரும் உறுதியாக உள்ளனர்.

அ.தி.மு.க., ,அணிகள், இணைப்பு ,பேச்சு, இரு, தரப்பிலும்...   குழு ,அமைப்பு!

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது.
இதன் காரணமாக, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. அதை மீட்க, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி துவங்கியுள்ளது.

அதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியை விட்டு விலக்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் அணி தெரி வித்தது. அதை ஏற்று, தினகரன் குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர். கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக, தினகரனும் தெரிவித்தார்.

மவுனம் சாதித்தனர்


ஆனால், துணை பொதுச் செயலர் பதவியை, ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அதே போல, பொதுச் செயலர் பதவி வகிக்கும் சசிகலா குறித்தும், அமைச்சர்கள் மவுனம் சாதித்தனர். இது, பன்னீர் அணியினருக்கு

சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா; துணை பொதுச் செயலராக தினகரன் நியமிக்கப்பட்ட தாக, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப் பட்டுள்ள, பிரமாண வாக்கு மூலங்களை வாபஸ் பெற வேண்டும்;'அவர்கள் இருவரி டமும், ராஜினாமா கடிதம் பெற வேண்டும்; ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணைக்கு, மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்' என, பன்னீர் அணியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவல கத்தில், முதல் வர் பழனிசாமி தலைமையில், மூத்த அமைச்சர் கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப் பட்ட முடிவு குறித்து, அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என, முதல்வர் தெரிவித்து உள்ளார். ஜெ., ஆட்சியும், கட்சியும் நுாறாண்டு நிலைக்க வேண்டும். தொண்டர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடிவு செய்துள்ளோம்.எங்கள் தரப்பினர், மிகவும் பொறுமையாக பேசினர். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; கட்சி சின்னத்தை மீட்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். அமைப்பு செயலர் வைத்திலிங்கம், 'யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்' என, கூறினார்.

பன்னீர் அணியுடன் பேச்சு நடத்த, வைத்தி லிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கட்சி அலுவலகத்திற்கு, தினமும் அமைச்சர்கள் வருவர்; பன்னீர் தரப்பினர் வந்தால் பேசத் தயார். அனைவரும் ஒற்றுமை யாக இருந்து, இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அவகாசம்


அமைச்சர், சி.வி.சண்முகம் கூறியதாவது:இன்றைக்கு கூட பேச தயாராக உள்ளோம். தேர்தல் கமிஷன், ஆவணங்கள் சமர்ப்பிக்க,

Advertisement

கால அவகாசம் வழங்கி உள்ளது. பேச்சுக்கு பின் தான், எதுவும் கூற முடியும். நாங்கள் வெளிப் படையாக இருக்கிறோம்; எந்த நிபந்த னையும் கிடையாது. நாங்கள் அனைவரும், ஒன்றாக பணிபுரிந்தவர்கள். தற்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதை ஒன்றாக அமர்ந்து பேசினால், களைய முடியும்.

பேச்சுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், எந்த வார்த்தையையும் பேச, நாங்கள் தயாராக இல்லை. கட்சி ஒன்றாக இணையவேண்டும்; இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்; தொடர்கள் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதை யடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அவரது அணி நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். பின், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறியதாவது:

எங்கள் அணி சார்பில், இரண்டு கருத்தை முன்வைத்தோம். அதன் தொடர்ச்சியாக, வைத்திலிங்கம் தலைமையில், பேச்சுக்காக, ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தொண்டர்கள் நலன் கருதியும், நாட்டு மக்கள் நலன் கருதியும், நாங்களும் பேச்சு நடத்த, ஒரு குழுவை அமைக்க உள்ளோம். அந்த குழுவில், யார் யார் அங்கம் வகிப்பர் என்பது, பின் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரு அணிகளும் குழு அமைப்பதால், ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ பேச்சு துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தாங்கள் முன்வைத்த நிபந்தனைகளில் பின் வாங்காமல், பேச்சை நடத்துவது என்பதில், பன்னீர் அணியினர் உறுதியாக உள்ளனர்.

தலா ஏழு பேர்


பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி தலைமையில், ஏழு பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக் குழுவில், முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், விஸ்வநாதன், எம்.பி., மைத்ரேயன், முன்னாள், எம்.எல்.ஏ., ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ., பாண்டியராஜன், முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சசி அணி சார்பில், எம்.பி., வைத்திலிங்கம் தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கபட்டு உள்ளது. இக்குழுவில், அமைச்சர்கள் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி,
செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பன்னீர்செல்வம் கூறுகையில், ''பேச்சு நடை பெற, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பேச்சு நடத்துவர்; நல்லது நடக்கும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரி - Chennai,இந்தியா
22-ஏப்-201723:51:44 IST Report Abuse

நரிசசியை எந்த முட்டாள் பொது செயலாளர் ஆக்கியது ?????இவ்வளவு பிரச்சனைக்கும் இது தானே காரணம்

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஏப்-201723:32:41 IST Report Abuse

K.Sugavanamசூதானமா நடந்து குள்ளநரிக்கூட்டத்தை விரட்டி அடியுங்க..டபுள் டீலிங் பண்ணியே உங்களை ஒழித்து விடுவார்கள்.

Rate this:
Venkatesan Venkatesan - தேனீ,இந்தியா
22-ஏப்-201720:20:14 IST Report Abuse

Venkatesan Venkatesanஇந்த அயோக்கியர்களின் ஆட்சியை ஒழித்து விட்டு பொதுத் தேர்தல் வர வேண்டும். எம்மக்கள் ஒருமுறை செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை போதும். இதை அனைத்து சமூக வலைதளங்களிலும் பதி்வு செய்வோம்...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஏப்-201723:30:33 IST Report Abuse

K.Sugavanamஇன்னொரு அயோக்கியருக்கு ஆட்சியை கொடுப்பதை விட இவர்களே இருந்துவிட்டு போகட்டும்..நிச்சயமாக பவர் ப்ரோக்கேர்ஸ் க்கு வாய்ப்பே அளிக்க கூடாது..என்னமா டபுள் டீலிங் பண்றாங்க இங்க நிலையான ஆட்சி அமையாமல் இருக்க. ...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X